அசாம் மாநிலம் சுவால்குச்சி மாவட்டத்தைச் சேர்ந்த சிறுமியும் சிறுவனும் ஃபேஸ்புக் மூலம் பழகியுள்ளனர். பின்னர் மொபைல் எண்களை பகிர்ந்து தினமும் பேசி வந்துள்ளனர்.இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியுள்ளது.
இந்த நிலையில், அந்த சிறுவனுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளது. பின்னர் சோதனை நடத்தியபோது அவருக்கு ஹெச்.ஐ.வி பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. இதை அறிந்த அந்த சிறுமி மிகவும் வருத்தத்தில் இருந்துள்ளார். மேலும் ஹெச்.ஐ.வி பாதிக்கப்பட்ட அந்த சிறுவனை தொடர்ந்து காதலித்தும் வந்துள்ளார்.
அவர் சில முறை வீட்டை விட்டு வெளியேறி காதலன் வீட்டுக்கு சென்ற நிலையில், சிறுமியின் பெற்றோர் அவரை மீண்டும் வீட்டுக்கு அழைத்து வைத்துள்ளனர். மேலும் சிறுவனுக்கு ஹெச்.ஐ.வி பாதிப்பு இருப்பதால் அவரிடம் தொடர்ந்து பழகுவதை சிறுமியின் பெற்றோர் கண்டித்து வந்துள்ளனர்.
இதனால் மிகவும் மனவேதனை அடைந்த சிறுமி, தனக்கும் ஹெச்.ஐ.வி பாதிப்பு வந்தால் அதன்பின்னர் காதல் குறித்து யாரும் ஏதும் சொல்லமாட்டார்கள் என கருத்தியுள்ளார். இதனால் தனது காதலரான அந்த சிறுவனின் ரத்தத்தை ஊசி மூலம் எடுத்து தனது உடலில் செலுத்திக்கொண்டுள்ளார். இதனால் அவருக்கும் ஹெச்.ஐ.வி பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
தனது காதலை நிரூபிக்க காதலரின் ஹெச்.ஐ.வி பாதித்த ரத்தத்தை தனக்குள் செலுத்திக்கொண்டு சிறுமியின் செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதே நேரம் சிறுமியின் செயலை பலரும் விமர்சித்து வருகின்றனர்.