இந்தியா

"காலையில் பள்ளி.. மாலையில் டெலிவரி.." - குடும்ப வறுமை காரணமாக டெலிவரி பாயாக மாறிய பள்ளி சிறுவன் !

குடும்ப வறுமை காரணமாக டெலிவரி பாயாக மாறிய 7 வயது சிறுவன் குறித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

"காலையில் பள்ளி.. மாலையில் டெலிவரி.." - குடும்ப வறுமை காரணமாக டெலிவரி பாயாக மாறிய பள்ளி சிறுவன் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

டெல்லியில் பாலத் ஷா என்ற பெயர் கொண்ட ஒரு சிறுவன் அந்த பகுதியிலலுள்ள ஒரு பள்ளியில் படித்து வருகிறார். 7 வயதாகும் இவர், தனது குடும்பத்துடன் அந்த பகுதியில் வசித்து வருகிறார். இவரது தந்தை சோமாட்டோவில் உணவு டெலிவெரி செய்யும் பணி செய்து வந்தார்.

இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு சிறுவனின் தந்தைக்கு சாலை விபத்து ஏற்பட்டது. இதனால் அவரால் பணிக்கு செல்ல முடியவில்லை. இதனால் சிறுவனின் குடும்பம் வறுமையில் தள்ளப்பட்டது. இதையடுத்து வேறு வழியின்றி அந்த 7 வயது சிறுவன் தனது தந்தையின் பணியை மேற்கொள்ள நினைத்தார்.

அதன்படி தற்போது Zomato-வில் டெலிவரி வேலையை செய்து வருகிறார். இருப்பினும் படிப்பை எந்த காரணத்திற்காகவும் கைவிடக்கூடாது என்பதால், அந்த சிறுவன் ஒரு பக்கம் தனது படிப்பு மறுபக்கம் வேலை என்று உழைக்க தொடங்கியுள்ளார். அந்த வகையில் காலையில் பள்ளி, மாலை 6 மணி முதல் இரவு 11 மணி வரை தனது சைக்கிள் மூலம் டெலிவரி பாயாக இருந்து வருகிறார்.

"காலையில் பள்ளி.. மாலையில் டெலிவரி.." - குடும்ப வறுமை காரணமாக டெலிவரி பாயாக மாறிய பள்ளி சிறுவன் !

சமீபத்தில் சிறுவன் டெலிவரி சென்ற இடத்தில் ராகுல் மித்தாலி என்பவர், சிறுவனை பற்றி வீடியோ எடுத்து அதனை இணையத்தில் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், தான் ஏன் டெலிவரி பாயாக மாறினேன் என்பது குறித்து சிறுவன் பேசியிருப்பார். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

குடும்ப வறுமை காரணமாக தனது பள்ளி படிப்புடன் சேர்ந்து டெலிவரி வேலையும் செய்து வரும் 7 வயது சிறுவனுக்கு பலரும் உதவ முன் வருகின்றனர். மேலும் அவருக்கு பாராட்டுக்களும் அவரது தந்தை விரைவில் குணமடையவும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்

banner

Related Stories

Related Stories