இந்தியா

“இது தோல்வியடைந்த வளர்ச்சி மாடல்.. வளர்ச்சிக்கு ஒருபோதும் உதாவது” : மோடி அரசை எச்சரிக்கும் ரகுராம் ராஜன்!

இந்தியாவின் வளர்ச்சிக்காக சிலர் இன்னும் கூடுதல் கட்டுப்பாடு மற்றும் எதிச்சதிகார சிந்தனை தேவை என நினைக்கின்றனர் என ரகுராம் ராஜன் தெரிவித்துள்ளார்.

“இது தோல்வியடைந்த வளர்ச்சி மாடல்.. வளர்ச்சிக்கு ஒருபோதும் உதாவது” : மோடி அரசை எச்சரிக்கும் ரகுராம் ராஜன்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் காங்கிரஸ் கட்சியின் சார்பில், நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன் கலந்துக்கொண்டு உரையாற்றினார்.

அப்போது பேசிய ரகுராம் ராஜன், “இந்தியாவின் வளர்ச்சியை ஜனநாயகம் தடுப்பதாக சிலர் பேசுகின்றனர். ஏன் வளர்ச்சிக்காக சிலர் இந்தியாவிற்கு இன்னும் கூடுதல் கட்டுப்பாடு மற்றும் எதிச்சதிகார சிந்தனை தேவை என நினைக்கின்றனர்.

இதுமுற்றிலும் தவறானது. இது நாட்டின் வளர்ச்சிக்கு ஒருபோதும் உதாவது. அதுமட்டுமல்லாது, பொருட்கள் மற்றும் மூலதனத்தை வலியுறுத்தும் ஒரு தோல்வியடைந்த வளர்ச்சி மாடலையே இவை அடைப்படையாக கொண்டுள்ளது. மேலும் இதுபுதிய சிந்தனைக்கான மாடல் அல்ல.

அதேபோல் நமது நாட்டில் உள்ள பொருளாதார வளர்ச்சியை பார்த்தோம் என்றால், செயல்திறன் மிகவும் குறைவாக இருக்கிறது. மேலும் சிறுபான்மை மக்களை இரண்டாம் தர குடிமக்களாக ஆக்குவது இந்தியாவை பிளவுப்படுத்தும். இதுமக்களிடையே கசப்பை ஏற்படுத்தும்.” எனத் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories