இந்தியா

"என்னது பெட்ரோல் போடலையா.." சரி அபராதம் கட்டு.. - கேரளாவில் டிராபிக் போலிஸ் !

பெட்ரோல் போடவில்லை என்று நபர் ஒருவருக்கு, அபராதம் விதிக்கப்பட்டுள்ளது தொடர்பான பில் இணையத்தில் வைரலாகி வருகிறது.

"என்னது பெட்ரோல் போடலையா.." சரி அபராதம் கட்டு.. - கேரளாவில் டிராபிக் போலிஸ் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

கேரளா மாநிலத்தில் பிரபல யூடியூப் சேனலான 'TJ's Vehicle Point' நடத்தில் வருபவர் தன்கச்சன். இவர் இன்சூரன்ஸ் பிசினஸில் சர்வேயர் மற்றும் இழப்பு மதிப்பீட்டாளராக 10 வருட அனுபவம் உள்ள இவர், 15 ஆண்டுகள் மோட்டார் வாகனத் துறையில் மோட்டார் வாகன ஆய்வாளராக பணியாற்றியவர்.

இவரது அனுபவம் மற்றும் அறிவு ஆகியவை பயன்படுத்தி சொந்தமாக யூடியூப் சேனல் ஒன்றை நடத்தி வருகிறார். அதில் இன்சூரன்ஸ் மற்றும் மோட்டார் வாகனங்கள் துறை மற்றும் சட்டத்தை பற்றி மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார். இவரின் ஒவ்வொரு வீடியோவும் எதாவது ஒரு சட்டத்தை முன்னிறுத்தி இருக்கும்.

"என்னது பெட்ரோல் போடலையா.." சரி அபராதம் கட்டு.. - கேரளாவில் டிராபிக் போலிஸ் !

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இவர் வெளியிட்ட வீடியோ ஒன்றில், ஒரு பில் பற்றி பேசியிருந்தார். அதாவது ஒருவர் அவரது வாகனத்தால் குறைவான பெட்ரோல் இருந்ததால் டிராபிக் அதிகாரிகளால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். அதோடு, கேரள மோட்டர் வாகன சட்டத்தில் இதற்கு சட்டப்பிரிவு எதும் இருக்கிறதா என்று தனக்குத் தெரியவில்லை என்றும், தனக்கு தெரிந்தவரை, இதுபோன்ற பில்கள், ஆதாரபூர்வமாக நீதிமன்றத்தில் நிலைத்து நிற்காது என்றும் தெரிவித்தார்.

"என்னது பெட்ரோல் போடலையா.." சரி அபராதம் கட்டு.. - கேரளாவில் டிராபிக் போலிஸ் !

மேலும் பேசிய அவர், இது போன்ற சட்டங்கள் பொது போக்குவரத்துக்கு உண்டு என்றும், ஆனால் சொந்த வாகனத்திற்கு கிடையாது என்றும் தெரிவித்துள்ளார். அதுமட்டுமின்றி, இது போன்ற சம்பவங்களால் போக்குவரத்துத் துறையினர் மீது பொதுமக்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தும் என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், கடந்த சில மாதங்களுக்கு முன்பு டெல்லியில் ஹெல்மெட் அணியாததால், இரு சக்கர வாகன ஓட்டிக்கு அபராதம் விதித்த சம்பவம் ஒன்றை சுட்டி காட்டிய அவர், அந்த சம்பவத்திற்காக டெல்லி போலிஸ் பகிரங்க மன்னிப்பு கேட்டதாகவும் தெரிவித்தார்.

எனவே இது போன்ற செயலை அதிகாரிகள் தவிர்க்கவும் வேண்டுகோள் விடுத்தார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

banner

Related Stories

Related Stories