பொதுவாக போக்குவரத்து நெரிசலை தவிர்க்க, போக்குவரத்து காவல்துறையினர் பல இடங்களில் நோ பார்க்கிங் வசதியை உருவாக்கியுள்ளனர். பார்க்கிங் இல்லாத பகுதிகளில் நிறுத்தப்படும் வாகனங்களுக்கு போக்குவரத்து காவல்துறையினர் அபராதம் விதித்து வருகின்றனர்.
ஆனால் போக்குவரத்து காவல்துறையினர் எந்த நடவடிக்கை எடுத்தாலும் சிலர் அதை மதிப்பதே இல்லை. சிலர் வேண்டுமென்றே நோ பார்க்கிங் பகுதியில் ஒரு நபர் தனது வாகனத்தை நிறுத்தியுள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூர் பகுதியில் அஞ்சுமன் காம்ப்ளக்ஸ் இருக்கிறது. இதன் அருகே உள்ள நோ பார்க்கிங் இடத்தில் நபர் ஒருவர் தனது இருசக்கர வாகனத்தை நிறுத்திவைத்து, அதில் அமர்ந்து ஏதோ செய்துகொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த போக்குவரத்து அதிகாரிகள், அந்த நபரை அவர் அமர்ந்திருந்த இருசக்கர வாகனத்தோடு சேர்த்து ஒரு கிரேன் கொண்டு வந்து தூக்கினர்.
மேலும் அவர் கீழே இறக்கி விட கூறியும், அவரை உயரே தூக்கினர். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், பலரும் இது வேடிக்கையாக உள்ளது. மேலும் இந்த சம்பவம் தொடர்பாக போக்குவரத்து அதிகாரிகளுக்கு ஒரு தரப்பினர் ஆதரவாகவும், மற்றொரு தரப்பினர் எதிராகவும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.