உத்தரபிரதேச மாநிலம் லக்னோ பகுதியை சேர்ந்தவர் சுசீலா திரிபாதி. 82 வயதாகும் இவர் ஓய்வு பெற்ற ஆசிரியையான இவர், தனது மகன் அமீத் என்பவருடன் வசித்து வருகிறார். ஜிம் பயிற்சியாளரான இவர், அமீத் பிட்புல் மற்றும் ஒரு லாப்ரடோர் ரக 2 நாய்களை வளர்த்து வந்தார்.
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு, வழக்கம்போல் மகன் ஜிம்முக்கு சென்றதும் சுசீலா திரிபாதி வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது திடீரென, பிட்புல் நாய், தாய் சுசீலா மீது பாய்ந்து சரமாரியாக கடித்து குதறியுள்ளது. இதில் பலத்த காயம் அடைந்த சுசீலா இரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
சில மணி நேரங்களுக்கு பிறகு வீட்டிற்கு வந்த மகன், தாய் இரத்த வெள்ளத்தில் கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்ததோடு கதறி அழுதார். இதையடுத்து அவரது உடல் உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. பரிசோதனையில் அறிக்கையில், கழுத்து முதல் வயிறு வரை 12 இடங்களில் நாய்க்கடித்துள்ளது தான், அவரது இறப்புக்கு காரணம் என்று குறிப்பிடபட்டிருந்தது.
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்திய நிலையில், தான் வளர்த்து வந்த இரண்டு நாய்களையும் மகன் அமீத், நாய்கள் காப்பகத்தில் ஒப்படைத்தார். தனது தாயை கொடூரமாக கடித்து குதறிய நாயை ஒன்றும் செய்யாமல், நாய்கள் காப்பகத்தில் பத்திரமாக அனுப்பிவைத்துள்ள மகன் அமீத்தின் செயல் அப்பகுதியில் பாராட்டை பெற்று வருகிறது.