இந்தியா

கல்லூரிக்கு சென்ற மாணவியை துரத்திக் கடித்த நாய்.. கேரளாவிலிருந்து படிக்க வந்த இடத்தில் நேர்ந்த சோகம் !

கோவையில் நாய் கடித்து 18 வயதான கல்லூரி மாணவி உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கல்லூரிக்கு சென்ற மாணவியை துரத்திக் கடித்த நாய்.. கேரளாவிலிருந்து படிக்க வந்த இடத்தில் நேர்ந்த சோகம் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

கேரளா மாநிலம் பாலக்காடு பகுதியைச் சேர்ந்தவர் ஸ்ரீலட்சுமி (18). இவர் கோவையில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் (BCA) இளங்கலை முதலாமாண்டு படித்து வந்தார். அப்போது வழக்கம்போல் கடந்த மே 30 ஆம் தேதி கல்லூரிக்குச் சென்று கொண்டிருந்தபோது, வழியில் வீட்டு வளர்ப்பு நாய் ஒன்று இவரை கடித்துள்ளது. இதையடுத்து நாய் கடித்ததற்காக அருகிலிருந்த தனியார் மருத்துவமனையில் ஒன்றில் ரேபிஸ் தடுப்பு ஊசி போட்டுள்ளார்.

கல்லூரிக்கு சென்ற மாணவியை துரத்திக் கடித்த நாய்.. கேரளாவிலிருந்து படிக்க வந்த இடத்தில் நேர்ந்த சோகம் !
E. Boros

ஆரம்பத்தில் இவருக்கு ரேபிஸ் நோயின் அறிகுறிகள் ஏதுவுமில்லை என்று கூறப்படுகிறது. ஆனால் கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு ஸ்ரீலட்சுமிக்கு லேசான காய்ச்சல் வந்துள்ளது. அது வழக்கமாக வரும் காய்ச்சல் என்று மாத்திரை போட்டு தூங்கியுள்ளார். இருப்பினும், மறுநாள் இன்னும் அதிகமாக, பின்னர் அவரது பெற்றோர் அவரை கேரளாவுக்கு அழைத்து சென்றனர். இதையடுத்து அங்குள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளார்.

கல்லூரிக்கு சென்ற மாணவியை துரத்திக் கடித்த நாய்.. கேரளாவிலிருந்து படிக்க வந்த இடத்தில் நேர்ந்த சோகம் !

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவருக்கு ரேபிஸ் நோய் தொற்றியுள்ளதாக கூறினர். இதனிடையே அவரை கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு திருச்சூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்று அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், நேற்று பரிதாபமாக உயிரிழந்தார்.

இதையடுத்து மாணவியை கடித்த நாயின் உரிமையாளரிடம் விசாரித்து போது, ஸ்ரீ லட்சுமியை கடிப்பதற்கு முந்தைய நாளான மே 29 ஆம் தேதி, உரிமையாளரைக் கடித்தது தெரிய வந்தது. ஆனால் உரிமையாளரின் உடல்நிலைக்கு எந்த ஒரு பிரச்னையும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories