பஞ்சாம் மாநிலம், தேரா பஸ்ஸி பகுதியில் போலிஸார் இரவு நேர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஒரு பெண் உட்பட 2 ஆண்கள் சாலையில் நின்று கொண்டிருந்தனர்.
இதைப்பார்த்த போலிஸார் ஏன் இங்கு நிற்கிறீர்கள் என கேட்டுள்ளனர். இதையடுத்து அவர்களுக்கும் போலியிருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த போலிஸார் ஒருவர் இளைஞரை துப்பாக்கியால் சுட்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலானதை அடுத்து இளைஞரை துப்பாக்கியால் சுட்ட போலிஸார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
மேலும் போலிஸாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டர்கள் தம்பதிகள் என்றும் விசாரணையில் தெரியவந்துள்ளது இது குறித்துப் பாதிக்கப்பட்ட தம்பதி கூறுகையில், நாங்கள் ஹெபத்பூர் சாலையில் நின்றுகொண்டிருந்தோம். அப்போது அங்கு வந்த போலிஸார் எங்களிடம் தவறாக நடந்து கொண்டனர். இதில் ஒரு போலிஸார் குடித்திருந்தார். அவர்தான் என் சகோதரனை துப்பாக்கியால் சுட்டார் என தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து போலிஸார் கூறுகையில், அவர்களை சோதனை செய்தபோது போலிஸாரை தாக்கினார்கள். தற்காப்புக்காக அவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது என தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.