இந்தியா

காவல்நிலையத்தில் பூனைகளை வளர்க்கும் கர்நாடகா போலிஸ்.. காரணத்தை கேட்டா அப்படியே ஷாக் ஆயிடுவிங்க!

கர்நாடகாவில் எலிகளைப் பிடிப்பதற்காகக் காவல்நிலையத்தில் புனைகள் வளர்க்கப்பட்டு வருகின்றன.

காவல்நிலையத்தில் பூனைகளை வளர்க்கும் கர்நாடகா போலிஸ்.. காரணத்தை கேட்டா அப்படியே ஷாக் ஆயிடுவிங்க!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

நாம் வீடுகளில் பூனைகளை வளர்ப்பது பற்றி கேட்டிருப்போம், ஆனால் காவல்நிலையத்தில் பூனைகளை வளர்க்கிறார் என்று கேள்வி பட்டிருக்கிறோமா?. ஆனால் இப்படி ஒரு சம்பவம் கர்நாடகாவில் உள்ள காவல்நிலையத்தில் நடந்துள்ளது.

கர்நாடகா மாநிலம், கவுரிபிதனூர் காவல்நிலையத்தில்தான் போலிஸார் பூனைகளை வளர்க்க முடிவு எடுத்துள்ளனர். காவல்நிலையத்தில் எலித் தொல்லை அதிகமாக உள்ளதாலேயே போலிஸார் இந்த பூனைகளை வளர்க்கும் முடிவுக்கு வந்துள்ளனர்.

காவல்நிலையத்தில் பூனைகளை வளர்க்கும் கர்நாடகா போலிஸ்.. காரணத்தை கேட்டா அப்படியே ஷாக் ஆயிடுவிங்க!

மேலும் காவல்நிலையத்தில் உள்ள ஆவணங்களைக் கடித்துச் சேதப்படுத்தி வருகின்றன. எலிகளைப் பிடிக்கப் பல வழிகளை முயற்சி செய்தும் போலிஸாரால் எலிகளை முழுமையாகக் காவல்நிலையத்தை விட்டு அப்புறப்படுத்த முடியவில்லை.

இந்நிலையில்தான் காவல்நிலையத்தில் இரண்டு பூனைகளைக் கொண்டு வந்து போலிஸார் வளர்த்து வருகின்றனர். இந்த நடவடிக்கைக்குப் பிறகு எலிகள் தொல்லை குறைந்துள்ளதாகவும் போலிஸார் தெரிவித்துள்ளனர்.

காவல்நிலையத்தில் பூனைகளை வளர்க்கும் கர்நாடகா போலிஸ்.. காரணத்தை கேட்டா அப்படியே ஷாக் ஆயிடுவிங்க!

எலிகளைப் பிடிப்பதற்காகக் காவல்நிலையத்தில், பூனைகளை போலிஸார் வளர்த்து வருவது அப்பகுதி மக்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த செய்தி இணையதளங்களில் வேகமாக வைரலாகி வருகிறது. பலரும் பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories