இந்தியா

"திசை திருப்புவதில் மோடி கைதேர்ந்தவர், ஆனால் பேரழிவை மறைக்க முடியாது" - ராகுல் காந்தி விமர்சனம்!

இந்திய மக்கள் பல்வேறு பிரச்சனைகளில் சிக்கி போராடிக் கொண்டிருக்கும் போது, அவர்களின் கவனத்தை திசை திருப்பும் அடுத்த விஷயத்துக்கு பிரதமர் மோடி திட்டமிடுகிறார் என ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.

"திசை திருப்புவதில் மோடி கைதேர்ந்தவர், ஆனால் பேரழிவை மறைக்க முடியாது" - ராகுல் காந்தி விமர்சனம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மீது அமலாக்கத்துறை சமீபத்தில் விசாரணை நடத்தியது. இது ராகுல் காந்தியின் மீதான ஒன்றிய அரசின் நேரடித் தாக்குதல் என விமர்சனம் எழுந்தது. மேலும் அமலாக்கத்துறையை கண்டித்த காங்கிரஸ் சார்பில் பெரும் போராட்டம் நடைபெற்றது.

இந்த போராட்டத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் தாக்கப்பட்டனர். இது தேசிய அளவில் பெரும் அதிர்வலைகள் ஏற்படுத்தியது. அதைத் தொடர்ந்து ஒன்றிய அரசின் அக்னிபாத் திட்டத்தை எதிர்த்து பல மாநிலங்களில் போராட்டம் வெடித்தது.

agnipath protest
agnipath protest

இது தேசிய அளவில் பாஜகவை கடும் நெருக்கடியில் தள்ளியது. மேலும், தற்போதைய நிலையில் பொருளாதாரம் பெரும் நெருக்கடியை சந்தித்து வருகிறது். நாட்டில் வேலையில்லாத் திண்டாட்டம், விலைவாசி உயர்வு போன்றவை மக்களை பாதித்து வருகிறது.

இதற்க்கு பிரதமர் மோடி எந்த கருத்தும் தெரிவிக்காமல் இருந்து வருகிறார். மேலும் ஒரு பிரச்சனையை மறைக்க பாஜக மற்றொரு பிரச்சனையை கையில் எடுப்பதாக விமர்சனம் எழுந்துள்ளது.

இந்த நிலையில் ராகுல் காந்தி பிரதமர் நரேந்திர மோடியை விமர்சித்துள்ளார். இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில், "திசை திருப்பும் வேலையில் பிரதமர் மோடி கைதேர்ந்தவராக இருக்கிறார். இருந்தாலும் அவரால், வேலையில்லாத் திண்டாட்டம், விலைவாசி உயர்வு, டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு குறைவு, எல்ஐசி நிறுவனத்தின் மதிப்பு சரிவு உள்ளிட்ட மத்திய அரசின் சொதப்பல்களை மறைக்க முடியவில்லை.

டி.எச்.எப்.எல். போன்ற மிகப்பெரிய வங்கி மோசடி பேரழிவுகளை மறைக்க முடியாது.இந்திய மக்கள் பல்வேறு பிரச்சனைகளில் சிக்கி போராடிக் கொண்டிருக்கும் போது, அவர்களின் கவனத்தை திசை திருப்பும் அடுத்த விஷயத்துக்கு பிரதமர் மோடி திட்டமிடுகிறார்" என்று கூறியுள்ளார். இவரின் இந்த பதிவு தற்போது அரசியலில் பேசுபொருளாகியுள்ளது.

banner

Related Stories

Related Stories