இந்தியா

இளைஞர்களுக்கு மோடி கொடுத்தது பக்கோடா தயாரிக்கும் அறிவு மட்டுமே.. காட்டமாக விமர்சித்த ராகுல் காந்தி!

கடந்த 8 ஆண்டில் நாட்டின் இளைஞர்களுக்கு பக்கோடா தயாரிக்கும் அறிவு மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளது என ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.

இளைஞர்களுக்கு மோடி கொடுத்தது பக்கோடா தயாரிக்கும் அறிவு மட்டுமே.. காட்டமாக விமர்சித்த ராகுல் காந்தி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

நாடு முழுவதும் அக்னிபாத் திட்டத்திற்கு எதிராக இளைஞர்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். பீகாரில் தொடங்கிய இந்த போராட்டம், டெல்லி உள்ளிட்ட வட மாநிலங்களில் முக்கிய நகரங்களுக்கும் பரவத் தொடங்கியுள்ளது. போராட்டத்தைக் கட்டுப்படுத்த போலிஸார் தடியடி தாக்குதல் நடத்தியதால், ஆத்திரமடைந்த போராட்டக்காரர்கள் இரயில்களுக்கு தீவைத்த சம்பவமும் அரங்கேறியுள்ளது.

இதன் காரணமாக வடமாநிலங்களுக்கு செல்லும் இரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அதுமட்டுமல்லாது பீகாரில் இந்த திட்டத்தை ஆதரித்து பேசிய பா.ஜ.க. தலைவர்களின் வீடுகள், அலுவலகங்களை சூரையாடி தீ வைத்ததால் பெரும் வன்முறைகாடாக அப்பகுதிகள் காட்சி அளிக்கிறது.

இளைஞர்களுக்கு மோடி கொடுத்தது பக்கோடா தயாரிக்கும் அறிவு மட்டுமே.. காட்டமாக விமர்சித்த ராகுல் காந்தி!

இந்நிலையில் வட மாநிலங்களில் பல்வேறு பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆரம்பத்தில் வடமாநிலங்களில் பரவிய இந்த வன்முறை தற்போது நாடு முழுவதும் பரவியுள்ளது. தெலுங்கானா போன்ற தென் மாநிலங்களிலும் ஒன்றிய அரசின் அக்னிபாத் திட்டத்தை எதிர்த்து பெரும் போராட்டம் நடைபெற்றது. அதோடு நேற்று சென்னையிலும் போராட்டம் நடைபெற்றது.

மேலும், ராஜஸ்தானில் காங்கிரஸ் கட்சியின் அசோக் கெலாட் தலைமையிலான அமைச்சரவையில் அக்னிபாத் திட்டத்தை ஒன்றிய அரசு திரும்ப பெற வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. அதைத் தொடர்ந்து காங்கிரஸ் சார்பில் அக்னிபாத் திட்டத்தை எதிர்த்து டெல்லியில் பிரியங்கா காந்தி தலைமையில் காங்கிரஸ் தலைவர்கள் இன்று தர்ணாவில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி அக்னிபாத் திட்டம் குறித்து கருத்து பதிவிட்டுள்ளார். இது தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், ‛‛வேலை தொடர்பாக தவறான நம்பிக்கையை கொடுத்த பிரதமர் மோடி, இப்போது இளைஞர்களை வேலையில்லா திண்டாட்டம் எனும் அக்னிபாதையில் நடக்க கட்டாயப்படுத்துகிறார். 8 ஆண்டில் இளைஞர்களுக்கு 16 கோடி வேலைவாய்ப்புகள் வழங்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் பக்கோடா தயாரிக்கும் அறிவு மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளது. நாட்டின் இத்தகைய நிலைக்கு பிரதமர் நரேந்திர மோடி காரணம்'' என காட்டமாக விமர்சித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories