பா.ஜ.க ஆளும் மாநிலங்களில் சிறுபான்மையினர், தலித் மற்றும் பெண்களுக்கு எதிராக நடைபெறும் வன்முறை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இத்தகைய சூழலில், கர்நாடகா மாநிலம் பாகல்கோட்டை விநாயகநகரில் ஒரு பெண் வழக்கறிஞர் மேல் கொடூர தாக்குதல் நடத்திய வீடியோ சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம் பாகல்கோட்டை விநாயகநகரத்தை சேர்ந்தவர் சங்கீதா. இவர் பாகல்கோட்டையில் வழக்கறிஞராக பணிபுரிந்து வருகிறார். இன்று வழக்கறிஞர் சங்கீதா வீட்டின் அருகே சாலையில் சென்றபோது அந்த பகுதிக்கு வந்த மஹாந்தேஷ் என்பவர் திடீரென சங்கீதாவை கொடூரமாக தாக்கி உள்ளார்.
அப்போது சங்கீதாவை காப்பாற்றுமாறு அவர் உறவினர்கள் கூச்சல்லிட்டாலும் அவரை காப்பாற்ற யாரும் முன்வரவில்லை என சொல்லப்படுகிறது. மஹாந்தேஷ் நடத்திய கொடூர தாக்குதலில் படுகாயமடைந்த சங்கீதாவை பொதுமக்கள் பாகல்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
சங்கீதா கொடுத்த புகாரின் பேரில் போலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். வழக்கறிஞர் சங்கீதாவுக்கும் மஹான்தேஷ்க்கு முன்பகை காரணமாக இந்த சம்பவம் நிகழ்ந்ததாக போலிஸார் விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.