இந்தியா

”அரசியல் சார்பின்றி பணியாற்றுங்கள்; மீறினால் கடும் நடவடிக்கை பாயும்” - IAS, IPSகளுக்கு சுப்ரீம்கோர்ட் ஆணை

ஓய்வு பெற்ற அதிகாரிகள் தேர்தலில் போட்டியிட குறிப்பிட்ட தடைகாலத்தை அறிவிப்பது குறித்து நாடாளுமன்றம்தான் சட்டம் இயற்ற வேண்டும். நீதிமன்றம் உத்தரவிட இயலாது.

”அரசியல் சார்பின்றி பணியாற்றுங்கள்; மீறினால் கடும் நடவடிக்கை பாயும்” - IAS, IPSகளுக்கு சுப்ரீம்கோர்ட் ஆணை
IBM LAB 36
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகள் அரசியல் சார்பில்லாமல் பணியாற்ற வேண்டும் எனவும், மீறுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.

தேர்தலில் போட்டியிட சீட் பெறும் எண்ணத்தில் அதிகாரிகள் செயல்படுவது தற்போது அதிகரித்து வருகிறது. எனவே, பணி ஓய்வுக்குப் பின்னர் குறிப்பிட்ட காலம் வரை தேர்தலில் நிற்க தடை விதிக்க வேண்டும் என்று தொடரப்பட்ட வழக்கு நீதிபதி இந்திரா பாணர்ஜி தலைமையிலான அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதிகள், ஓய்வு பெற்ற அதிகாரிகள் தேர்தலில் போட்டியிட குறிப்பிட்ட தடைகாலத்தை அறிவிப்பது குறித்து நாடாளுமன்றம்தான் சட்டம் இயற்ற வேண்டும். நீதிமன்றம் உத்தரவிட இயலாது.

அதே நேரத்தில், அதிகாரிகள் ஒருமைப்பாடு, பாரபட்சமற்ற தன்மை, நடுநிலை, வெளிப்படைத் தன்மை ஆகியவற்றுக்கு உட்பட்டு பணியாற்ற வேண்டும் என்கிற பணியாளர் விதிமுறைகளை கட்டாயமாக அமல்படுத்த வேண்டும்.

அதனை மீறி செயல்படும் அதிகாரிகள் மீது 1968 ஆம் ஆண்டு பணியாளர் சேவை விதிமுறைகளின்படி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவில் கூறியுள்ளனர்.

banner

Related Stories

Related Stories