பாரதிய ஜனதா கட்சி ஆளும் உத்தர பிரதேச மாநிலத்தில் நாளொரு மேனி பொழுதொரு வண்ணமாக திருட்டு, கொள்ளை, பாலியல் வன்கொடுமை என பல குற்றச்சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டும் குற்றவாளிகள் எளிதில் தப்பிவிடுவதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
இந்த நிலையில் சந்தெளலி காவல்நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள ஹார்டுவேர் கடையில் கல்லா பெட்டியை உடைத்து அதில் இருந்த ஆறாயிரம் ரூபாயையும் நூற்றுக்கணக்கான ஹார்டுவேர் பொருட்களையும் திருடிய திருடன் கடையில் பொறுத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமிரா முன்பு ஆனந்தமாக நடனமாடியிருக்கிறார்.
இந்த சம்பவம் கடந்த வெள்ளியன்று (ஏப்.,15) நடந்திருக்கிறார். இதனையறிந்த உரிமையாளர் கடையில் பொருட்களும், பணமும் திருடு போனது குறித்து ஏப்ரல் 16ம் தேதி காவல்நிலையத்தில் புகார் கொடுத்திருக்கிறார்.
அதன்பேரில் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில் மேற்குறிப்பிட்ட நிகழ்வு நடந்திருக்கிறது. இதனையடுத்து வழக்குப்பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும், திருடனை தேடி வருவதாகவும் சந்தெளலி போலிஸார் ட்விட்டரில் சமாஜ்வாதி செய்திதொடர்பாளரின் பதிவுக்கு பதில் தெரிவித்துள்ளனர்.