ஆந்திராவில் கடந்த 2019ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் ஓய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி ஆபார வெற்றி பெற்று ஆட்சியமைத்தது. முதல்வராக ஜென்மோகன் ரெட்டி பதவிபேற்றுக் கொண்டார். அவருடன் அமைச்சர்களும் பதவி ஏற்றனர்.
அப்போது, முதல்வர் ஜென்மோகன் ரெட்டி இரண்டு ஆண்டுகளில் அமைச்சரவை மாற்றி அமைக்கப்படும் என கூறினார். இதையடுத்து சில மாதங்களாகவே ஆந்திர அமைச்சரவை மாற்றி அமைக்கப்படும் என எதிர்ப்பார்க்கப்பட்டு வந்தது.
இதையடுத்த 24 அமைச்சர்களும் இரண்டு நாட்களுக்கு முன்பு தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர். இந்நிலையில் நேற்று புதிதாக 25 அமைச்சர்கள் பதவி ஏற்றுக் கொண்டனர். இதில் நடிகை ரோஜாவும் ஒருவர். இவருக்கு சுற்றுலா, கலாச்சாரம் மற்றும் இளைஞர் நலத்துறை வழங்கப்பட்டுள்ளது.
நடிகை ரோஜா தெலுங்கு தேசம் கட்சியில் இணைந்து 2004ம் ஆண்டு நகரி தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். பிறகு 2009ம் ஆண்டும் போட்டியிட்டு தோற்றுபோனார். இதனால் தெலுங்கு தேசம் கட்சியில் இருந்து அவர் ஓரங்கட்டப்பட்டார்.
பிறகு ஜெகன்மோகன் ரெட்டியின் தலைமையிலான ஓய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியில் இணைந்து 2014ம் ஆண்டு நடந்த சட்டப்பேரவை தேர்தலில் நகரி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று முதல்முறையாக சட்டமன்ற உறுப்பினராக பதவி ஏற்றார். அப்போது அந்த கட்சி எதிர்க்கட்சி அந்தஸ்தை மட்டுமே பெற்றது.
பின்னர் 2019ம் ஆண்டு நடந்த பேரவைத் தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்றார். மேலும் ஓய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியும் ஆட்சியை பிடித்தது. இதனால் அவருக்கு அமைச்சர் பதவி கொடுக்கப்படும் என எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால் அவருக்கு அமைச்சர் பதவி கொடுக்கப்படவில்லை.
இந்நிலையில் மாற்றி அமைக்கப்பட்டுள்ள அமைச்சரவையில் நடிகை ராஜாவிற்கு அமைச்சர் பதவி கொடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.