மகாராஷ்டிரா மாநிலம், மல்ஷேஜ் காட் பகுதியில் போக்குவரத்து காவலர் சஞ்சய் குடே என்பவர் போக்குவரத்து காவல் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது சாலையில் குரங்கு ஒன்று வந்துள்ளது.
அந்தக் குரங்கு கடும் வெயில் காரணமாக தண்ணீருக்காக தாகத்தோடு தவித்ததை உணர்ந்த போக்குவரத்து காவலர் உடனே தன்னிடம் இருந்த தண்ணீர் பாட்டிலை எடுத்து குரங்கிற்கு தண்ணீர் கொடுத்து உதவியுள்ளார்.
இதை சாலையில் சென்றவர்கள் பார்த்து நெகிழ்ச்சியடைந்து அதை வீடியோ எடுத்துள்ளனர். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலான நிலையில், மனிதநேயம் மிக்க காவலர் சங்சய் குடேவுக்கு பாராட்டுகள் குவித்து வருகிறது.
மேலும் சுசாந்தா நந்து என்ற IFS அதிகாரி இந்த வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து, "முடிந்தவரை எல்லோரும் அன்பாக இருங்கள். காவலர் சஞ்சய் குடேவின் இந்த வீடியோ அனைத்து நல்ல காரணங்களுக்காகவும் பரவி வருகிறது" எனப் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ 43 ஆயிரம் பார்வைகளைக் கடந்துள்ளது.