மத்திய பிரதேச மாநிலம், ரட்லம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சோஹைல். அவரது மனைவி ஷாஹீன் கான். இவருக்குக் கடந்த மார்ச் 28ம் தேதி மருத்துவமனையில் பிரசவம் பார்க்கப்பட்டுள்ளது.
அப்போது ஓர் உடல், இரண்டு தலைகள், இரண்டு இதயங்கள், மூன்று கைகளோடு ஒட்டி பிறந்த குழந்தையைப் பார்த்து மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இப்படிப் பிறக்கும் குழந்தைகள் பெரும்பாலும் இறந்தே பிறக்கும்.
ஆனால், இந்த குழந்தை உயிருடன் இருப்பதால் என்ன மாதிரியான சிகிச்சை செய்யலாம் என மருத்துவர்கள் குழு தீவிரமாக ஆலோசனை மேற்கொண்டு வருகிறது. இதையடுத்து இந்தூரில் உள்ள மருத்துவமனையில் அதிசய குழந்தை மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பிலிருந்து வருகிறது.
ஏற்கனவே மத்திய பிரதேசத்தில் 2019ம் ஆண்டு இளம் பெண் ஒருவருக்கு இரண்டு தலைகள், மூன்று கைகளுடன் பிறந்தது என்பது குறிப்பிடத்தக்கது. லட்சத்தில் ஒரு குழந்தைதான் இப்படிப் பிறக்க வாய்ப்புள்ளது. இப்படி பிறக்கும் குழந்தைகளுக்கு Dicephalic Parapagus மருத்துவத்தில் அழைக்கப்படுகிறது என மருத்துவர் லஹோடி தெரிவித்துள்ளார்.