உத்தர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர் இர்ஃபான். இவர் சுங்கச்சாவடி அருகே ஃபாஸ்ட்டேக் விற்பனை செய்யும் கடை ஒன்றை நடத்தி வருகிறார். இவரது நண்பர் ரகீப் என்பவரும் இர்ஃபானின் கடை அருகே உணவு கடை நடத்தி வருகிறார்.
மேலும், இர்ஃபான் தொழிலிலும் ரகீப் முதலீடு செய்துள்ளார். இவருவரும் சேர்ந்து தங்களின் கடையைப் பார்த்துக்கொள்ள மொஹம்மது அசிப் என்பவரை பணியில் வைத்துள்ளனர்.
இந்நிலையில் இர்ஃபான் மற்றும் ரகீப் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதனால் கொடுத்த பணத்தை ரகீப் திரும்பக் கேட்டுள்ளார். மேலும் பணம் தரவில்லை என்றால் கடையைத் தானே எடுத்துக் கொள்வேன் எனவும் கூறியுள்ளார்.
அதேபோல் இர்ஃபானை கொல்லவும் திட்டமிட்டுள்ளார். இதையடுத்து தனது நண்பர்களுடன் சேர்ந்து இர்ஃபானை கொலை செய்து அவரது உடலை 30 துண்டாக வெட்டி புதைத்துள்ளனர்.
பின்னர் தனது மகனை காணவில்லை என இர்ஃபானின் தந்தை மார்ச் 18ஆம் தேதி கொடுத்த புகாரின் பேரில் போலிஸார் நடத்திய விசாரணையில் இந்த உண்மை வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இதையடுத்து போலிஸார் ரகீப் மற்றும் அசிப்பை கைது செய்துள்ளனர்.