இந்தியா

“10 நிமிடத்தில் டெலிவரி.. புதிய அறிவிப்பால் வெடித்துள்ள சர்ச்சை” : விளக்கம் கொடுத்த Zomato நிறுவனம்!

10 நிமிடத்தில் டெலிவரி செய்யப்படும் என Zomato நிறுவனத்தின் முடிவிற்கு நெட்டிசன்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

“10 நிமிடத்தில் டெலிவரி.. புதிய அறிவிப்பால் வெடித்துள்ள சர்ச்சை” : விளக்கம் கொடுத்த Zomato நிறுவனம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

உலகம் முழுவதும் ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றனர். இந்தியாவில் கூட zomato, swiggy, uber நிறுவனங்கள் செயல்படுகின்றன. இந்நிறுவனங்களில் பணி பாதுகாப்பற்ற நிலையில் பட்டதாரி இளைஞர்கள் உட்பட லட்சக்கணக்கானோர் வேலைபார்த்து வருகின்றனர்.

மேலும், வாடிக்கயைளர்களுக்கும் உணவு டெலிபரி செய்பவர்களுக்கும் இடையே அவ்வப்போது ஏதாவது ஒரு பிரச்சனை எழுந்து கொண்டே இருக்கிறது. அதுவும் குறிப்பாக உணவு நேரத்திற்குக் வருவதில்லை என்ற குற்றச்சாட்டை வாடிக்கையாளர்கள் அதிகமாக முன்வைத்து வருகின்றனர்.

இந்நிலையில், zomato நிறுவனம் 10 நிமிடத்தில் உணவு டெலிவரி செய்யப்படும் என்ற புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு சமூக ஆர்வலர்களும், அரசியல் கட்சித் தலைவர்களும் கடும் எதிர்ப்புகளைப் பதிவு செய்து வருகின்றனர்.

காங்கிரஸ் கட்சியின் மக்களை உறுப்பினர் கார்த்தி சிதம்பரமும், zomato நிறுவனத்தின் இந்த அறிவிப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது குறித்து அவரது ட்விட்டரில், "டெலிவரி செய்பவர்கள் யாரும் நிரந்தர பணியாளர்கள் கிடையாது.

அவர்களுக்கு எந்த சலுகையும் கிடையாது. ஆனால் குறுகிய காலத்தில் டெலிவரி செய்ய வேண்டும் என குறிப்பிட்டிருப்பது ஏற்க முடியாது. இந்த விஷயம் நாடாளுமன்றத்துக்கு எடுத்துச்செல்லப்படும்” என பதிவிட்டுள்ளார்.

அதேபோல் சமூக ஆர்வலர்கள் பலரும், குறுகிய காலத்தில் உணவு டெலிவரி செய்வது ஆபத்தானது. டெல்வரியை எடுத்து வரும் ஊழியர்களுக்குத் தேவையில்லாத மன உளைச்சலை ஏற்படுத்து என கூறிவருகின்றனர்.

இப்படி பல்வேறு தரப்பிலிருந்தும் கருத்துகள் வந்ததை அடுத்து zomato நிறுவனர் தீபேந்தர் விளக்கம் கொடுத்துள்ளார். அதில், 10 நிமிட டெலிவரி என்பது அனைத்து வகையான உணவுக்கும் கிடையாது. பிரியாணி உள்ளிட்ட சில உணவுகளுக்கு மட்டுமே இந்த நடைமுறை இருக்கும்.

மேலும் சரியான நேரத்தில் டெல்வரி செய்யவில்லை என்றால் ஊழியர்களுக்கு அபராதம் விதிக்கப்படமாட்டாது. அதேபோல் சரியான நேரத்தில் உணவு கொடுத்தாலும் ஊக்கத் தொகை கிடையாது என தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே zomato சேவை மைய ஊழியர் ஒருவர் இந்தி தேசிய மொழி. இதை நாம் அனைவரும் தெரிந்திருக்க வேண்டும் என வாடிக்கையாளர் ஒருவரிடம் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு அந்நிறுவனம் மன்னிப்பும் கோரியது என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது தனது ஊழியர்களின் நலனைப் பற்றி கவலைப்படாமல், 10 நிமிடத்தில் உணவு டெல்வரி செய்யப்படும் என zomato நிறுவனம் அறிவித்திருப்பதும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories