இந்தியா

மேற்குவங்கத்தில் அடுத்தடுத்து இரண்டு கவுன்சிலர்கள் சுட்டுக்கொலை.. மர்ம நபர்களால் தொடரும் பதற்றம்!

மேற்குவங்கத்தில் அடுத்தடுத்து இரண்டு கவுன்சிலர்கள் சுட்டுக்கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேற்குவங்கத்தில் அடுத்தடுத்து இரண்டு கவுன்சிலர்கள் சுட்டுக்கொலை.. மர்ம நபர்களால் தொடரும் பதற்றம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

மேற்கு வங்க மாநிலம் பன்னிஷாட்டி பகுதியைச் சேர்ந்தவர் அனுபம் தத்தா (48). திரிணாமுல் கட்சி சார்பில் இரண்டு முறை கவுன்சிலராக தேர்தேடுக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் நேற்றையதினம் அவர் வீட்டின் அருகில் உள்ள கடைக்குச் சென்றுவிட்டு வீடு திரும்புகளையில் அங்கு மேட்டார் சைக்களில் வந்த மர்ம நபர்கள் அவரை வழிமறித்து துப்பாக்கியால் சுட்டுவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.

மர்ம நபர்கள் சுட்டத்தில் இரண்டு தோட்டாக்கள் அவரது தலை மற்றும் தோள்பட்டையில் தாக்கியதில் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து கீழே விழுந்தார். உடனே அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லும் வழியிலேயே உயிரிழந்தார்.

இந்தசம்பவத்தின் பரப்பு அடக்குவதற்குள், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த தபன் காண்டு என்ற கவன்சிலர் வீட்டின் அருகே நடைபயிற்சி செய்யும்போது, மர்ம நபர்கள் இரண்டுபேர் அவரை சுட்டுவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். இதில் தலை மற்றும் கழுத்தில் குண்டுகள் பாய்ந்து சம்பவ இடத்திலேயே தபம் காண்டு உயிரிழந்தார்.

தபம் காண்டு காங்கிரஸ் கட்சியின் சார்பில் 4 முறை கவுன்சிலராகவும், நகராட்சியின் முன்னாள் தலைவர், துணைத் தலைவராகவும் இருந்தவர். இந்நிலையில் மர்மநபர்கள் அவரைக் சுட்டுக்கொன்ற சம்பவம் அக்கட்சி தொடர்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மேலும் அடுத்ததடுத்து இரண்டு கவுன்சிலர்கள் சுட்டுக்கொள்ளப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories