கேரளா மாநிலத்தைச் சேர்ந்த 10 வயது சிறுமி ஒருவர் பாலியல் வன்கொடுமையால் கர்ப்பமடைந்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அவரது தாய் கருவைக் கலைக்க அனுமதி கோரி கேரள உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார்.
இந்த சிறுமியின் தந்தையே மகளை பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும் சிறுமியின் வயிற்றில் உள்ள கரு முழுமை பெற்றுள்ளதாகவும் மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
இந்நிலையில்தான் தாய் நீதிமன்றத்தை நாடியுள்ளார். இந்த வழக்கு நீதிபதி பி.வி.குன்ஹிகிருஷ்ணன் அமர்வுக்கு வந்தது. இதை விசாரித்த நீதிபதி, குழந்தை உயிருடன் பிறந்தால் அதைப் பேணி பாதுகாக்கும் பொறுப்பு, தற்போது சிறுமி சிகிச்சை பெற்று வரும் மருத்துவமனையைச் சாரும்.
இது தொடர்பான முடிவு ஒருவாரத்திற்குள் மாநில சுகாதாரத்துறை தெரிவிக்க வேண்டும். சிறுமியின் கர்ப்பத்திற்கு அவரது தந்தையே காரணமாக இருப்பார் என்றால் இந்த சமூகம் வெட்கி தலைகுனிய வேண்டும். அந்த நபருக்கு நீதித்துறை கடுமையான தண்டனை வழங்கும் என உத்தரவிட்டுள்ளார்.