உத்தரப்பிரதேசம், பஞ்சாப், உத்தரகாண்ட், கோவா மற்றும் மணிப்பூர் ஆகிய 5 மாநிலங்களில் சமீபத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடந்து முடிந்தது.
இதில், உத்தரகாண்ட் மாநிலத்தில் 70 தொகுதிகளுக்கும், கோவாவில் 40 தொகுதிகளுக்கும், பஞ்சாபில் 117 தொகுதிகளுக்கும், உத்தரப்பிரதேசத்தில் 403 தொகுதிகளுக்கும், மணிப்பூரில் 60 தொகுதிகளுக்கும் சட்டப்பேரவை தேர்தல் நடந்து முடிந்தது. இதில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்படுகின்றன.
காலை 8 மணிக்கு வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியது. இதைத் தொடர்ந்து, முன்னணி நிலவரங்கள் வெளியாகி, இந்த மாநிலங்களில் அடுத்து யார் ஆட்சியை பிடிக்கப் போகிறார்கள் என்று எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
உத்தரப்பிரதேசம் :
இந்நிலையில், 403 இடங்களை கொண்ட உத்தரப்பிரதேச சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க தற்போது 120 இடங்களிலும், சமாஜ்வாடி 97 இடங்களிலும் முன்னிலையில் உள்ளது.
கோவா :
அதேபோல், 40 இடங்களை கொண்ட கோவா சட்டமன்றத் தேர்தலில், காங்கிரஸ் 17 இடங்களிலும், பா.ஜ.க 18 இடங்களிலும், திரிணாமூல் காங்கிரஸ் 4 இடங்களிலும் முன்னிலையில் உள்ளது.
பஞ்சாப் :
பஞ்சாப் மாநிலத்தில் மொத்தம் 117 இடங்களை கொண்ட தொகுதிகளில், காங்கிரஸ் 77 இடங்களிலும், ஆம் ஆத்மி 20 இடங்களிலும், அகாலி தளம் 15 இடங்களிலும், பா.ஜ.க மூன்று இடங்களிலும் முன்னிலையில் உள்ளது.
இதனிடையே, பஞ்சாப் மாநில முன்னாள் முதல்வர் அம்ரிந்தர் சிங் அவர் போட்டியிட்ட பட்டியாலா தொகுதியில் பின்னடைவைச் சந்தித்துள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட ஆம் ஆத்மி கட்சியின் அஜித் பால் சிங் கோலி முன்னிலையில் உள்ளார்.
மணிப்பூர் :
60 இடங்களை கொண்ட மணிப்பூர் சட்டமன்றத் தேர்தலில், காங்கிரஸ் 14 இடங்களிலும், பா.ஜ.க 17 இடங்களிலும், தேசிய மக்கள் கட்சி 4 இடங்களிலும் முன்னிலையில் உள்ளது.
உத்தரகாண்ட் :
உத்தரகாண்ட் மாநிலத்தில் மொத்தம் 70 இடங்களை கொண்ட தொகுதிகளில், காங்கிரஸ் 20 இடங்களிலும், பா.ஜ.க 20 இடங்களிலும், ஆம் ஆத்மி 1 இடங்களிலும் முன்னிலையில் உள்ளது.