இந்தியா

“உக்ரைன் போரை பயன்படுத்தி ரூ.37,000 மோசடி” : கண்ணீர் விட்ட போபால் பெண் - நடந்தது என்ன?

உக்ரைனில் இருக்கும் தனது மகளை மீட்டு அழைத்து வரக் கோரி அரசு அலுவலகத்திற்கு வந்த பெண்ணிடம் ஒருவர் பண மோசடி செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

“உக்ரைன் போரை பயன்படுத்தி ரூ.37,000 மோசடி” : கண்ணீர் விட்ட போபால் பெண் - நடந்தது என்ன?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

உக்ரைன் மீது ரஷ்யா படையெடுத்த நாள் முதலே இந்தியாவும் பதற்றத்தில் உள்ளது. காரணம், உக்ரைனில் இந்தியர்கள் குறிப்பாக 20,000 மாணவர்கள் கல்வி பயிலச் சென்ற நிலையில் போர்ச் சூழலில் அங்கு செக்கியுள்ளனர்.

போர்ப் பதற்றம் தொடங்கியதிலிருந்து 4,000 இந்தியர்கள் உக்ரைனில் இருந்து வெளியேறிவிட்டனர். இப்போது 16,000 பேர் அங்கு சிக்கியுள்ளனர். அவர்களை மீட்டு இந்தியாவிற்கு அழைத்து வரும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், உக்ரைனில் இருக்கும் தனது மகளை மீட்டு அழைத்து வரக் கோரி அரசு அலுவலகத்திற்கு வந்த பெண்ணிடம் ஒருவர் பண மோசடி செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய பிரதேச மாநிலம் போபாலைச் சேர்ந்தா வைஷாலி வில்சன் என்பவர், தனது மகள் ஷ்ருஷ்டி உக்ரைனில் சிக்கியுள்ளதால் அதிர்ச்சி அடைந்துள்ளார். மகளை மீட்டுத்தரக்கோரி அரசு அலுவலகங்களுக்குச் சென்று வந்தபோது, பிரதமர் அலுவலகத்தில் தான் பணிபுரிவதாகக் கூறி ஒருவர் அறிமுகமாகியுள்ளார்.

உக்ரைனில் சிக்கித் தவிக்கும் மகளை பத்திரமாக மீட்டுத் தருவதாகக் கூறி ரூ.42,000 பெற்றுள்ளார். பின்னர் அவர் மீது சந்தேகமடைந்த அப்பெண் அவரிடம் பணத்தைத் திருப்பித் தருமாறு கேட்டுள்ளார்.

அதற்கு அவர் ரூ. 5000 மட்டும் திருப்பி அனுப்பிவிட்டு, மீத தொகைக்குபோலியான பரிவர்த்தனை தகவல்களை அனுப்பியுள்ளார். பின்னர், தான் மோசடி செய்யப்பட்டதை உணர்ந்த அப்பெண்மணி, தன்னிடம் பணம் வாங்கி ஏமாற்றியவர் மீது புகார் அளித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories