இந்தியா

ஆனந்த் சுப்பிரமணியனை கைது செய்தது CBI... சாமியார் கண்ணசைவில் கோடிக்கணக்கில் சுருட்டிய இவர் யார்?

தேசிய பங்குச் சந்தை முறைகேடு வழக்கில் NSE-யின் முன்னாள் செயலாக்க அதிகாரி ஆனந்த் சுப்பிரமணியன் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஆனந்த் சுப்பிரமணியனை கைது செய்தது CBI... சாமியார் கண்ணசைவில் கோடிக்கணக்கில் சுருட்டிய இவர் யார்?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

தேசிய பங்குச் சந்தை முறைகேடு வழக்கில் NSE-யின் முன்னாள் செயலாக்க அதிகாரி ஆனந்த் சுப்பிரமணியன் கைது செய்யப்பட்டுள்ளார்.

தேசிய பங்குச் சந்தையான NSE-யின் தலைமை நிர்வாக அதிகாரியாக இருந்த சித்ரா ராமகிருஷ்ணா தனது பதவிக் காலத்தில், என்எஸ்இ தொடர்பான முக்கிய தகவல்களை இமயமலையில் இருக்கும் ஒரு சாமியாரின் சொல்படி முக்கிய முடிவுகளை எடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

சித்ரா ராமகிருஷ்ணா, பங்குச்சந்தை விதிமுறைகளை மீறி செயல்பட்டு உயர் அதிகாரிகளை நியமனம் செய்ததாகக் கூறி அவருக்கு SEBI அமைப்பு, 3 கோடி ரூபாய் அபராதம் விதித்தது.

NSE தலைமை நிர்வாக அதிகாரியாகவும், எம்.டி-யாகவும் இருந்த சித்ரா ராமகிருஷ்ணா பங்குச்சந்தை தொடர்பான தகவல்கள், ஆண்டறிக்கை விபரம் உட்பட அனைத்து அம்சங்கள் குறித்தும் ரகசிய சாமியாருடன் பகிர்ந்து கொண்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

இந்நிலையில், அந்த சாமியாரின் பரிந்துரையின் பேரில் ஆனந்த் சுப்பிரமணியனை NSE-யின் ஆலோசகராக நியமித்ததாகவும் தெரியவந்தது.

இந்த பணியிடத்தை நிரப்ப எந்தவித விளம்பரமும் செய்யாமல் ஆனந்த் சுப்பிரமணியனை மட்டும் நேர்முகத்தேர்விற்கு அழைத்திருக்கிறார். அந்த சாமியாரின் பரிந்துரையின் பேரில் ஆனந்திற்கு அதிக சம்பளம் கொடுத்து வந்ததாகவும் தகவல் வெளியானது.

சித்ரா மற்றும் ஆனந்த் இருவரும் இணைந்து பணம் சம்பாதிக்கும் நோக்கில் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தேசிய பங்குச் பங்குசந்தை முறைகேடு வழக்கில் ஆனந்த் சுப்பிரமணியனை சி.பி.ஐ கைது செய்துள்ளது.

அந்த மர்ம சாமியாரே ஆனந்த் சுப்பிரமண்யன்+தான் என்று அதிர்ச்சியூட்டும் தகவல் கசிந்துவரும் நிலையில், சிபிஐ விசாரணையில் விவரங்கள் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

banner

Related Stories

Related Stories