இந்தியா

மதுபானம் குடித்ததில் 4 பேர் பலி.. 40 பேர் மருத்துவமனையில் அனுமதி : பா.ஜ.க ஆளும் உ.பி-யில் தொடரும் அவலம்!

உத்தர பிரதேசத்தில் போலி மதுபானம் குடித்ததில் 4 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதுபானம் குடித்ததில் 4 பேர் பலி.. 40 பேர் மருத்துவமனையில் அனுமதி : பா.ஜ.க ஆளும் உ.பி-யில் தொடரும் அவலம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

உத்தரப் பிரதேச மாநிலம், அசம்கர் மாவட்டத்தில் ஞாயிறன்று மதுபானம் குடித்த பலருக்கும் உடல்நிலையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் பலரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்ந்துள்ளனர்.

இது குறித்து போலிஸார் நடத்திய விசாரணையில், போலி மதுபானங்களை குடித்தால் இவர்களுக்கு உடல்நிலையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பது தெரியவந்துள்ளது. மேலும் மதுபானம் குடித்ததில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். அதேபோல் 40க்கும் மேற்பட்டோர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், போலி மதுபானங்களை விற்பனை செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அம்மாவட்ட காவல்துறை ஆணையர் விஜய் விஷ்வாஸ் தெரிவித்துள்ளார். தேர்தல் நேரத்தில் கள்ளசந்தையில் போலி மதுபானங்களை விற்பனை செய்ய பா.ஜ.க அரசு அனுமதி அளித்துள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.

உத்தரப் பிரதேச மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற்று வரும் நிலையில், போலி மதுபானம் குடித்ததில் 4 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் ஆளும் பா.ஜ.கவிற்கு மேலும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே மூன்றுகட்ட தேர்தல் முடிவடைந்த நிலையில், அடுத்து நடைபெற இருக்கும் 4ம் கட்ட தேர்தலில் இந்த பிரச்சனை பிரதிபலிக்கும் என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

banner

Related Stories

Related Stories