இந்தியா

“8 வயதில் 6.6 அடி உயரம்.. ஒவ்வொரு ஆண்டும் 4 அங்குலம் வளரும் சிறுவன்” : யார் இந்த கின்னஸ் கரண் சிங்?

கரண் சிங் ஒவ்வொரு 2 வருடத்திற்கும் 4 அங்குலம் என்ற அளவில் வளர்ந்து வருவதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

“8 வயதில் 6.6 அடி உயரம்.. ஒவ்வொரு ஆண்டும் 4 அங்குலம் வளரும் சிறுவன்” : யார் இந்த கின்னஸ் கரண் சிங்?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

உ.பி., மாநிலம் மீரட் நகரில் வசிப்பவர் ஸ்வெல்தனா சிங். ஆசியாவின் மிக உயரமான பெண் என்ற பெருமையைப் பெற்றவர். இவர் உயரம் ஏழு அடி இரண்டு அங்குலம். கணவரை விட அதிகம் உயரம் கொண்டவர். இவர் மகன்தான் உலகின் அதிக உயரமான குழந்தை என்ற பெருமையைப் பெற்றுள்ளான். அந்தக் குழந்தையின் பெயர் கரண் சிங்.

கரண் சிங் பிறக்கும்போதே இரண்டு அடி உயரம். இரண்டரை வயது இருக்கும்போதே கரண் சிங்கின் உயரம் நான்கு அடி ஐந்து அங்குலம். தற்போது 8 வயதாகும் நிலையில் உயரம் 6.6 அடியாக அதிகரித்துள்ளது. அவர் வயது குழந்தைகளை விட, இரண்டு மடங்கு உயரமாக இருக்கிறார் கரண் சிங்.

“8 வயதில் 6.6 அடி உயரம்.. ஒவ்வொரு ஆண்டும் 4 அங்குலம் வளரும் சிறுவன்” : யார் இந்த கின்னஸ் கரண் சிங்?

கரண் சிங் ஒவ்வொரு 2 வருடத்திற்கும் 4 அங்குலம் என்ற அளவில் வளர்ந்து வருவதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். குழந்தைகளுக்கான உடை எதையும் அவனுக்கு அணிவிக்க முடிவதில்லை. பெரிய ஆண்களுக்கு உரிய ஆடைகள் தான் அவனுக்கு பொருத்தமாக உள்ளன என்கிறார் அவரது தாய்.

கரண் சிங்கை முதலில் நர்சரி பள்ளியில் சேர்க்க அவன் தாய் அழைத்துச் சென்றபோது பள்ளியில் சேர்க்க ஆசிரியர்கள் மறுத்துவிட்டனர். பின்னர், பிறப்பு சான்றிதழை காட்டிய பின்னர்தான், அவரை பள்ளியிலேயே சேர்க்க முன்வந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories