குஜராத் மாநிலம் வல்வாத் பகுதியில் உள்ள பள்ளிகளில் பிப்ரவரி 14ஆம் தேதி அன்று 1 முதல் 8ஆம் வகுப்பு வரை உள்ள பள்ளி மாணவர்களுக்கு பேச்சுப் போட்டி இன்று நடைபெற்றது. இந்த பேச்சுப் போட்டியில், “மை ரோல் மாடல் நாதுராம் கோட்சே ( “My role model Nathuram Godse”)” என்ற தலைப்பு உள்ளிட்ட 3 தலைப்புகளின் கீழ் பேச்சுப் போட்டி நடந்துள்ளது.
மகாத்மா காந்தியை சுட்டுக்கொன்ற நாதுராம் கோட்சேவைக் கொண்டாடும் வகையில், “மை ரோல் மாடல் நாதுராம் கோட்சே” என தலைப்பில் பேச்சுப் போட்டி நடத்தியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதனையடுத்து, இந்த தலைப்பு தொடர்பாக காந்தி நகரில் உள்ள கலாசாரத்துறை உயரதிகாரிகளிடம் இருந்து விசாரணை நடத்த உத்தரவு வந்தது. அதனைத் தொடர்ந்து இந்த தலைப்பின் கீழ் போட்டி நடத்த உத்தரவிட்ட வல்சால் மாவட்ட இளைஞர் மேம்பாட்டு அதிகாரி மிதாபென் கவ்லி பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
பள்ளி மாணவர்கள் மத்தியில் இந்துத்வா கும்பல்கள் இதுபோல மதவெறியை புகுத்துவதைக் கண்காணிக்கவேண்டும் என கல்வியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.