இந்தியா

”OLXல் விற்று GPS-ஐ வைத்து காரை திருடி சுகபோக வாழ்வு” -பெங்களூரில் சிக்கிய ஹை-டெக் கேரள திருட்டு கும்பல்!

உணவகத்தில் சாப்பிட்டுவிட்டு திரும்பிய போது வெளியே நிறுத்தப்பட்டிருந்த கார் காணாமல் போனதைக் கண்டு அதிர்ச்சியடைந்திருக்கிறார் காரை வாங்கியவர்.

”OLXல் விற்று GPS-ஐ வைத்து காரை திருடி சுகபோக வாழ்வு” -பெங்களூரில் சிக்கிய ஹை-டெக் கேரள திருட்டு கும்பல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

இணையத்தின் பயன்பாடு ஒருபுறம் நன்மையை கொடுத்தாலும் அதன் மற்றொரு புறம் பல குற்றங்களை எளிதில் நடத்துவதற்கான வழிகளையே காண்பிக்கிறது. இதன் காரணமாக அண்மைக்காலங்களாக சைபர் குற்றங்கள் பெரிதளவில் நடத்தப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் கேரளாவைச் சேர்ந்த இளைஞர் கும்பல் ஒன்று இப்படியான சைபர் குற்றத்தை நடத்தி அதில் சிக்கியிருக்கிறார்கள்.

GPS வசதியை பயன்படுத்தி விற்ற காரையே திருடி மீண்டும் அதனை இணையதளத்தின் மூலம் விற்பனை செய்வதை வாடிக்கையாக கொண்டு அதன் மூலம் கிடைக்கும் பணத்தை வைத்து வயநாடு மற்றும் பெங்களூருவில் தாராளமாக செலவழித்து வந்திருக்கிறார்கள்.

ஆனால் அவர்களின் இந்த சுகபோக வாழ்க்கை கடைசியாக விற்பனை செய்த காரை திருடியதன் பிறகு கொச்சி போலிஸாரால் முடிவுக்கு வந்திருக்கிறது. அதன்படி மலப்புரத்தைச் சேர்ந்த இக்பால் சலிம் (24), முகமது ஃபஹில் (26) மற்றும் ஷியாம் மோஹன் (23) ஆகிய மூவரும் பளரிவட்டோம் போலிஸாரால் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.

கடந்த பிப்ரவரி 8ம் தேதி கைது செய்யப்பட்டவர்களால் OLXல் கார் விற்பனை விளம்பரம் செய்யப்பட்டிருக்கிறது. இதனை திருவனந்தபுரத்தைச் சேர்ந்த விஜின் என்பவர் வாங்க முன்வந்திருக்கிறார். இதனையடுத்து கோழிக்கோடு சென்று காரை பெற்றுக்கொண்டு பணத்தை கூகுள் பே மூலம் அனுப்பியிருக்கிறார் விஜின்.

பின்னர் கொச்சி வழியாக காரில் வீடு திரும்பியபோது பளரிவட்டோம் பைபாஸ் சாலையில் இரவு 9.30 மணியளவில் உணவகத்தில் சாப்பிட்டுவிட்டு திரும்பிய போது வெளியே நிறுத்தப்பட்டிருந்த கார் காணாமல் போனதைக் கண்டு விஜின் அதிர்ச்சியடைந்திருக்கிறார்.

உடனடியாக போலிஸிடம் புகார் கொடுத்ததன் பேரில் ஓட்டல் வாயிலில் இருந்த சிசிடிவியை ஆய்வு செய்தபோது காரை திருடிச் சென்றது இக்பாலும் அவரது கூட்டாளிகள் என தெரிய வந்தது. இதனையடுத்து OLX கணக்கு, கூகுள் பே செய்த பரிவர்த்தனை மற்றும் மொபைல் எண் ஆகியவற்றைக் கொண்டு பெங்களூருவில் தலைமறைவாக இருந்த மூவரையும் போலிஸார் கைது செய்திருக்கிறார்கள்.

முன்னதாக கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பாலக்காட்டைச் சேர்ந்தவரிடம் இருந்து ரூ.3.35 லட்சத்துக்கு இக்பால் காரை வாங்கியிருக்கிறார். 1.45 லட்சம் ரூபாய் மட்டுமே கொடுத்துவிட்டு ஜனவரி 30க்குள் மீதி பணத்தை கொடுப்பதாக கூறியிருக்கிறார். ஆனால் சொன்னபடி எஞ்சிய பணத்தை கொடுக்காமல் ஃபோனை ஸ்விட்ச் ஆஃப் செய்துவிட்டு வேறொரு நபருக்கு காரை விற்றி மீண்டும் அதனை திருடியிருக்கிறார்கள்.

இதே போன்று வலப்பட்டணம் பகுதியைச் சேர்ந்தவரிடம் சொகுசு காரை விற்பதாகச் சொல்லி 6 லட்சம் ரூபாயை மோசடி செய்திருக்கிறார்கள் கைதான மூவர் கும்பல். இவர்கள் மீது வலப்பட்டணம் காவல் நிலையத்திலும் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

banner

Related Stories

Related Stories