பயணி ஒருவர் மெட்ரோ ரயில் நடைமேடையில் நடந்து வரும் போது செல்போன் பார்த்துக் கொண்டே வந்திருக்கிறார். அப்போது நடைமேடையின் விளிம்பு வரை நடந்து வந்தவர் தடுமாறி தண்டவாளத்தில் விழுந்திருக்கிறார்.
இந்த சம்பவம் டெல்லியின் வடகிழக்கு பகுதியில் உள்ள ஷாதரா மெட்ரோ ரயில் நிலையத்தில் நேற்று முன் தினம் (பிப்.,4) நடந்திருக்கிறது.
ஷைலேந்தர் மேத்தா என்பவர் மும்முரமாக செல்போன் பார்த்தபடியே ரயில்நிலைய நடைமேடையில் நடந்தவர் திடீரென தண்டவாளத்தில் விழுந்திருக்கிறார்.
இதனை எதிர்புற நடைமேடையில் இருந்த மத்திய தொழில் பாதுகாப்புப்படை வீரர் பார்த்ததும் உடனடியாக தண்டவாளத்தில் இறங்கி எதிர்முனையில் கீழே விழுந்த ஷைலேந்தரை ரயில் வருவதற்குள் நடைமேடையில் ஏற்றிவிட்டிருக்கிறார்கள்.
CISF வீரர்களின் துரிதமான செயல்பாட்டால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டிருக்கிறது. இந்த சம்பவம் அனைத்து மெட்ரோ ரயில் நிலைய சிசிடிவி கேமிராவில் பதிவாகியுள்ளது. அதனை CISF ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது. இந்த வீடியோதான் தற்போது பல்லாயிரக்கணக்கானோரால் பார்க்கப்பட்டதோடு CISF வீரர்களை பாராட்டி வருகின்றனர்.