இந்தியா

ஓட்டு கேட்டு வந்த பாஜக MLA-ஐ விரட்டியடித்த முசாபர் நகர் கிராமத்தினர்: பரபரப்பை கிளப்பும் உ.பி., தேர்தல்!

ஓட்டு கேட்டு வந்த பாஜக MLA-ஐ விரட்டியடித்த முசாபர் நகர் கிராமத்தினர்: பரபரப்பை கிளப்பும் உ.பி., தேர்தல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

மக்கள் நலனுக்கு எதிராக ஒன்றிய பாஜக அரசு கொண்டு வரும் ஒவ்வொரு திட்டத்தையும் உத்தர பிரதேச மாநில பாஜக அரசு ஆமோதிப்பதோடு அவற்றை செயல்படுத்துவதிலும் முனைப்பு காட்டியுள்ளது. இப்படி இருக்கையில், அந்த மாநிலத்துக்கான சட்டமன்றத் தேர்தல் பிப்ரவரி 10ம் தேதி தொடங்கி 7 கட்டங்களாக நடைபெற இருக்கிறது.

இப்படியாக பல்வேறு மக்கள் விரோத சட்டங்களை திட்டங்களை நிறைவேற்றுவதாலேயே தேசிய அளவில் பாஜகவின் செல்வாக்கு குறைந்து வருவதில் எந்த ஐயப்பாடும் இல்லை. அது உத்தர பிரதேச தேர்தலிலும் பிரதிபலிக்க தவறவில்லை.

ஓட்டு கேட்டு வந்த பாஜக MLA-ஐ விரட்டியடித்த முசாபர் நகர் கிராமத்தினர்: பரபரப்பை கிளப்பும் உ.பி., தேர்தல்!

ஏற்கெனவே யோகியின் அமைச்சரவையில் இருந்து 3 அமைச்சர்கள், 4 எம்.எல்.ஏக்கள் ராஜினாமா செய்து கட்சியை விட்டே விலகியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், ஓட்டு கேட்க மக்களிடத்தில் செல்லும் போதும் துரத்திவிடப்படும் நிகழ்வும் உத்தர பிரதேச பாஜகவினருக்கு நடைபெற்று வருகிறது.

ஓட்டு கேட்டு வந்த பாஜக MLA-ஐ விரட்டியடித்த முசாபர் நகர் கிராமத்தினர்: பரபரப்பை கிளப்பும் உ.பி., தேர்தல்!

அவ்வகையில், முசாபர் நகரில் தனது சொந்த தொகுதியில் உள்ள கிராமத்தில் வாக்கு சேகரிக்கச் சென்ற பாரதிய ஜனதா கட்சியின் எம்.எல்.ஏ. விக்ரம் சைனி சிங்கை எதிர்த்து கிராம மக்கள் கோஷமிட்டிருக்கிறார்கள். அவர்களிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டிருக்கிறார் விக்ரம் சைனி சிங்.

இருப்பினும் மக்கள் தொடர்ந்து கோஷமிட்டு அவரது வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் செய்வதறியாது முழித்த பாஜக எம்.எல்.ஏ. விக்ரம் சைனி சிங் அங்கிருந்து காரில் ஏறி புறப்பட்டிருக்கிறார்.

banner

Related Stories

Related Stories