டெல்லி உச்சநீதிமன்றத்தில் வரதட்சணை தொடர்பான வழக்கு ஒன்று தலைமை நீதிபதி என்.வி.ரமணா, ஏ.எஸ்.போபண்ணா, ஹிமா கோலி ஆகிய மூன்று பேர் அடங்கிய அமர்வுக்கு விசாரணைக்கு வந்தது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், "பெண் வீட்டாரிடம் இருந்து சொத்தாகவோ அல்லது வேறு எந்த வடிவிலும் விலை உயர்ந்த பொருட்களை வாங்கினால் அதை வரதட்சணையாகவே கருதவேண்டும்.
பெண் வீட்டாரிடம் சொந்த வீடு கட்ட பணம் கேட்பதும் வரதட்சணைக்குள் கொண்டுவரப்பட வேண்டும். வரதட்சணை கொடுமைகளை வேரோடு பிடுங்க ஐ.பி.சி 304 பி பிரிவில் விரிவான விளக்கம் அளிக்கப்பட வேண்டும்.
பெண்களிடம் பெண்களே வரதட்சணை கேட்பது மிகவும் மோசமான செயலாகும். நீதிமன்றங்கள் வரதட்சணை வழக்குகளை விரிவான முறையில் அணுக சட்ட செயல்பாடுகளில் மாற்றம் கொண்டு வரவேண்டும்" எனத் தெரிவித்துள்ளனர்.