இந்தியா

“கிளம்பும்போது நெகட்டிவ்.. இப்போ எப்படி பாசிட்டிவ் ஆச்சு?” : ஒரே விமானத்தில் 125 பயணிகளுக்கு தொற்று!

இத்தாலியில் இருந்து அமிர்தசரஸ் விமான நிலையத்திற்கு வந்த தனி விமானத்தில் பயணித்த 125 பயணிகளுக்கு கொரோனா உறுதியாகியுள்ளது.

“கிளம்பும்போது நெகட்டிவ்.. இப்போ எப்படி பாசிட்டிவ் ஆச்சு?” : ஒரே விமானத்தில் 125 பயணிகளுக்கு தொற்று!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

இந்தியாவில் மீண்டும் மகாராஷ்டிரா, டெல்லி, கர்நாடகா, தமிழகம், கேரளா, குஜராத் என பல மாநிலங்களிலும் தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை வெகுவாக அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், இத்தாலியிலிருந்து பஞ்சாப் மாநிலத்தின் அமிர்சரஸ் நகரத்துக்கு இன்று பிற்பகலில் வந்த விமானத்தில் 125 பயணிகளுக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டதை அடுத்து, அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர்.

இந்த விமானம் 19 குழந்தைகள் உள்ளிட்ட 179 பயணிகளுடன் இத்தாலியின் மிலன் நகரிலிருந்து புறப்பட்டு, அமிர்தசரஸ் நகருக்கு பிற்பகல் 1.30 மணிக்கு தரையிறங்கியது.

கொரோனா பரவல் அதிகமாக இருக்கும் நாடுகளில் இருந்து வரும் பயணிகள் அனைவருக்கும் கண்டிப்பாக ஆர்டிபிசிஆர் பரிசோதனை செய்யப்படும் என ஏற்கெனவே ஒன்றிய அரசு அறிவுறுத்தியுள்ளது.

அந்தவகையில் இ்த்தாலியில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால், அங்கிருந்து வரும் பயணிகளுக்கும் பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 179 பயணிகளில் 125 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதற்கிடையே, தொற்று உறுதியான பயணிகள், இத்தாலியில் புறப்படும்போது, தங்களுக்கு கொரோனா பரிசோதனையில் நெகட்டிவ் வந்தது, இந்தியா வந்ததும் எவ்வாறு பாசிட்டிவ் வந்தது என அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இந்தியாவில் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், வெளிநாடுகளில் இருந்து வருவோருக்கு தொடர்ந்து பாதிப்பு உறுதி செய்யப்பட்டு வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories