இந்தியா

”என் குடும்பத்தோட முதல் ஸ்மார்ட் ஃபோன்” - சாரட் வண்டியில் வந்து கொண்டாடி தீர்த்த ம.பி. டீக்கடை தொழிலாளி!

குதிரை வண்டியில் மேள தாளங்கள் முழங்க பட்டாசு வெடித்து ஸ்மார்ட் ஃபோன் வாங்கியதை கொண்டாடிய டீக்கடை தொழிலாளி.

”என் குடும்பத்தோட முதல் ஸ்மார்ட் ஃபோன்” - சாரட் வண்டியில் வந்து கொண்டாடி தீர்த்த ம.பி. டீக்கடை தொழிலாளி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

21ம் நூற்றாண்டில் நவீன உலகின் சாட்சியாக ஒவ்வொரு மனிதர்களின் கையிலும் 11ம் விரலாக ஸ்மார்ட் ஃபோன் முக்கியப்பங்கு வகிக்கிறது. ஆனால் இதற்கு இணையான உலகில் வாழும் சிலர் இந்த ஸ்மார்ட் ஃபோன்களை வாங்க முடியாமலும் அதனை பயன்படுத்த முடியாமலும் இருக்கின்றனர்.

இப்படி இருக்கையில், சாதாரண டீ விற்கும் தொழிலாளி ஒருவர் தான் ஸ்மார்ட் ஃபோன் வாங்கியதை சுற்றத்தாருக்கு தெரிவிக்கும் வகையில் மேள தாளங்களுடன் குதிரையில் வந்து பட்டாசு வெடித்து பண்டிகையை போல கொண்டாடிய நிகழ்வு மத்திய பிரதேசத்தில் நடைபெற்றுள்ளது.

இதுதொடர்பாக செய்தி வெளியிட்டுள்ள Free press journal-ல், “மத்திய பிரதேச மாநிலத்தின் சிவ்புரி பகுதியைச் சேர்ந்தவர் முராரி குஷ்வாஹா. அதேப்பகுதியில் டீ விற்கும் தொழிலில் ஈடுபட்டு வருகிறார். அவருடைய 5 வயது மகள் வெகுநாட்களாக ஸ்மார்ட் ஃபோன் வேண்டும் என வலியுறுத்தி வந்திருக்கிறார்.

மகளுக்கு அளித்த வாக்குறுதிப்படி முராரி தற்போது 12 ஆயிரத்து 500 ரூபாய் மதிப்புள்ள ஸ்மார்ட் ஃபோன் ஒன்றினை வாங்கியிருக்கிறார். அது அவரது குடும்பத்தின் முதல் ஸ்மார்ட் ஃபோன் என்பதால் அதனைக் கொண்டாடும் விதமாக பட்டாசு வெடித்து மேள தாளங்கள் முழங்க குதிரை வண்டியில் ஊர்வலமாக சென்று மகிழ்ச்சியை வெளிப்படுத்தியிருக்கிறார் முராரி.” என குறிப்பிடப்பட்டுள்ளது.

முராரி மற்றும் அவரது குடும்பத்தினரின் இந்த கொண்டாட்டங்கள் அடங்கிய காணொலி சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

banner

Related Stories

Related Stories