இந்தியாவில் கொரோனா தொற்று வேகமாகப் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து கொரோனா தொற்றிலிருந்து மக்களை பாதுகாக்க நாடுமுழுவதும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.
இந்தியாவில் 125 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. ஆனால் பெரும்பாலானவர்கள் முதல் தவணை தடுப்பூசி மட்டுமே செலுத்தியுள்ளனர். இரண்டாவது தவணை செலுத்து கொண்டவர்களின் எண்ணிக்கை மிக குறைவாக உள்ளது.
இதையடுத்து நாடு முழுவதும் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்துவதற்கான பணிகளை மாநில அரசுகள் தீவிரப்படுத்தி வருகின்றது. இந்நிலையில் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்பவர்களுக்கு ஸ்மார்ட் போன் வழங்கப்படும் என்ற திட்டத்தை ராஜ்கோட் நகராட்சி அறிவித்துள்ளது.
குஜராத் மாநிலம், ராஜ்கோட் நகராட்சியில் தடுப்பூசி செலுத்திக் கொள்ள மக்களைக் கவரும் விதமாக, டிசம்பர் 4ம் தேதியிலிருந்து 10ம் தேதி வரை கொரோனா இரண்டாவது தவணை செலுத்திக் கொள்பவர்களுக்குக் குலுக்கல் போட்டி நடைபெறும். இதில் வெற்றி பெறுபவர்களுக்கு ரூ.50 ஆயிரம் பதிப்பிலான ஸ்மார்ட் போன் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.