இந்தியா

“அழுகிய நிலையில் 15 மாதங்களாக கிடந்த சடலம்” : ESI மருத்துவமனையில் அதிர்ச்சி சம்பவம் - நடந்தது என்ன?

அழுகிய நிலையில் 15 மாதங்களாக கிடந்த இரண்டு சடலம் கிடந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

“அழுகிய நிலையில் 15 மாதங்களாக கிடந்த சடலம்” : ESI மருத்துவமனையில் அதிர்ச்சி சம்பவம் - நடந்தது என்ன?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

பெங்களூரு ராஜாஜி நகர் இ.எஸ்.ஐ மருத்துவமனை ஊழியர்களின் அலட்சியம் காரணமாக அழுகிய நிலையில் 15 மாதங்களாக கிடந்த இரண்டு சடலம் கிடந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பெங்களூரு ராஜாஜிநகர் செயல்பட்டு வரும் இ.எஸ்.ஐ மருத்துவமனையில், துர்நாற்றம் வெளியேற்றியதை தொடர்ந்து இத்தகைய வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

“அழுகிய நிலையில் 15 மாதங்களாக கிடந்த சடலம்” : ESI மருத்துவமனையில் அதிர்ச்சி சம்பவம் - நடந்தது என்ன?

சாமராஜப்பேட்டை துர்கா மற்றும் கே.பி அக்ரஹாரபகுதியை சேர்ந்ந முனிராஜ் ஆகிய இருவர் கொரோனோ தொற்றால் பாதிக்கப்பட்டு கடந்த 15 மாதங்களுக்கு முன் இ.எஸ்ஐ மருத்துவமனை அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

அப்போது நோய்ப்பரவல் அதிகமாக இருந்தால் உறவினரிடம் சடலங்களை ஒப்படைக்காமல் பெங்களூர் மாநகராட்சியே இறுதி அடக்கம் செய்து வந்தது. இந்த நிலையில். அந்த இருவரின் சடலங்கள் கடந்த 15 மாதங்களாக ஊழியர்களின் கவனக்குறைவால் மருத்துவ கிடங்கின் சவபெட்டி வைக்கும் பகுதியில் இருந்தது தெரியவந்துள்ளது.

banner

Related Stories

Related Stories