கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டத்திற்குட்பட்ட குலுக்கல்லூரைச் சேர்ந்தவர் சைனபா. இந்நிலையில், கடந்த செப்டம்பர் 26ம் தேதி சைனபாவும் அவரது மகளும், பேத்தியும் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தனர்.
அப்போது வீட்டின் ஓட்டை பிரித்து உள்ளே புகுந்த மர்ம நபர் சைனபாவின் பேத்தியின் கழுத்திலிருந்த ஒரு பவுன் தங்க சங்கிலியையும், பீரோவிலிருந்த முக்கால் பவுன் தங்கை வளையல் மற்றும் ரூ.5 ஆயிரம் பணத்தையும் எடுத்துக் கொண்டு தப்பிச் சென்றுள்ளார்.
பின்னர், காலையில் எழுந்துபார்த்து போது நகைகள் காணாமல் போனதைப் பார்த்து மூன்று பேரும் அதிர்ச்சியடைந்துள்ளனர். இதையடுத்து சைனபா இது குறித்து காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார்.
இந்த புகாரின் அடிப்படையில் போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும் சைனபா வீட்டின் அருகே உள்ள சி.சி.டி.வி காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
இதையடுத்து வீட்டின் ஓட்டை பிரித்து நகைகளை திருடியது சென்றது சைனாபின் முன்னாள் கணவர் அப்பாஸ் என்பதை போலிஸார் கண்டுபிடித்தனர். பின்னர் திருட்டு சம்பவம் நடந்து ஒருமாதம் கழித்து நேற்று போலிஸார் அப்பாஸை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
மேலும் சைனாவும், அப்பாசும் கடந்த 15 நாட்கள் முன்புதான் விவாகரத்து பெற்றுள்ளனர் என்பதும் போலிஸார் விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் பழிவாங்கும் நோக்கத்தில் திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்டாரா என்பது குறித்தும் போலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.