இந்தியா

சேட்டை செய்த 2ஆம் வகுப்பு மாணவனை தலைகீழாக தொங்கவிட்ட தலைமை ஆசிரியர் : உ.பி-யில் கொடூர தண்டனை!

குறும்பு செய்த 2ஆம் வகுப்பு மாணவனை தலைமை ஆசிரியர் பள்ளி கட்டிடத்தில் இருந்து தலைகீழாகத் தொங்க விட்டு அச்சுறுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சேட்டை செய்த 2ஆம் வகுப்பு மாணவனை தலைகீழாக தொங்கவிட்ட தலைமை ஆசிரியர் : உ.பி-யில் கொடூர தண்டனை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

உத்தர பிரதேச மாநிலம், மிர்ஸாபூரில் தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் சோனு என்ற மாணவர் 2ஆம் வகுப்பு படித்து வருகிறார்.

இந்நிலையில், நேற்று பள்ளியின் மதிய உணவு இடைவேளையின் போது சக மாணவர்களிடம் சோனு அதிகமாகக் குறும்பு செய்துள்ளார். இதைப் பார்த்த பள்ளி தலைமை ஆசிரியர் விஸ்வகர்மா சோனுவை பள்ளியின் முதல் மாடியில் இருந்து தலைகீழாகத் தொங்கவிட்டு அச்சுறுத்தியுள்ளார்.

இதைப்பார்த்து சக மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் அதிர்ச்சியடைந்தனர். 'இனி குறும்பு செய்ய மாட்டேன், மன்னித்து விடுங்கள்' எனச் சொன்னால்தான் விடுவேன் என தலைமை ஆசிரியர் கூறியுள்ளார். பின்னர் மாணவர் மன்னிப்பு கேட்ட பிறகே தலைமை ஆசிரியர் அம்மாணவனை விடுவித்தார்.

பள்ளி தலைமை ஆசிரியரின் இந்த கொடூர தண்டனை வீடியோ இணையத்தில் வைரலாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோவை அடுத்து மாவட்ட நீதிபதி பிரவீன் குமார் லக்ஷ்கர் பள்ளிக்குச் சென்று விசாரணை நடத்தினர். மேலும் தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட கல்வித்துறைக்குப் புகார் அளித்துள்ளார்.

தலைமை ஆசிரியரின் இந்த கொடூர தண்டனைக்கு கல்வியாளர்கள் மற்றும் பெற்றோர்கள் கடும் எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories