இந்தியா

மீண்டும் உயர்கிறது கேஸ் விலை? சாமானிய மக்களை நட்டாற்றில் விடப்போகிறாரா பிரதமர் மோடி?

சிலிண்டர் விலை கடும் உயர்வு எதிரொலி. 5 கிலோ சமையல் எரிவாயு சிலிண்டரை ரேஷன் கடைகள் மூலம் விற்பனை செய்ய ஒன்றிய அரசு திட்டம்.

மீண்டும் உயர்கிறது கேஸ் விலை? சாமானிய மக்களை நட்டாற்றில் விடப்போகிறாரா பிரதமர் மோடி?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

பாஜக ஆட்சிக்கு வந்த பின்னர் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை தொடர்ந்து உயர்த்தப்பட்டு வருகிறது. இதன் காரணமாக நாடு முழுவதும் அதன் விலை 900 முதல் 1000 ரூபாய் வரை விற்கப்படுகிறது. சிலிண்டருக்கு 300 ரூபாய் வரை வழங்கப்பட்டு வந்த மானியம் தற்போது 24 ரூபாயாக் குறைக்கப்பட்டுள்ளது.

இதனால் நடுத்தட்டு மக்கள், ஏழைகள் கடுமையாக பாதிப்படைந்துள்ளனர். வருமானத்தில் பெரும்பகுதியை சிலிண்டருக்கு செலவிடும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த விலை உயர்வுக்கு நாடு முழவதும் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.

இதனை சமாளிக்க தற்போது ரேஷன் கடைகள் மூலம் சிறிய வகை சிலிண்டரான 5 கிலோ சிலிண்டரை விற்பனை செய்ய ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு எண்ணெய் நிறுவனங்களைக் அரசு கேட்டுக் கொண்டிருப்பதாக ஒன்றிய உணவுத்துறை செயலாளர் சுதான்சு பாண்டே தெரிவித்துள்ளார்.

மாநில அரசுகள் மற்றும் எண்ணெய் நிறுவன அதிகாரிகளுடன் நேற்று நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், சிலிண்டர் விலையை மேலும் உயர்த்த எண்ணெய் நிறுவனங்கள் ஒன்றிய அரசிடம் கோரிக்கை வைத்துள்ளன. 6 முறை சிலிண்டர் விலையை உயர்த்திய பின்னரும் 100 ரூபாய் நஷ்டத்தில்தான் சிலிண்டர்கள் விற்கப்படுவதாக நிறுவனங்கள் கூறியுள்ளன.

இதனை ஈடு கட்ட மேலும் சிலிண்டர் விலையை உயர்த்த அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளாதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அரசு அனுமதி அளித்தால் அடுத்த வாரம் மீண்டும் விலை உயர்த்தப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

banner

Related Stories

Related Stories