இந்தியாவில் கொரோனா மூன்றாவது அலை ஏற்படுவதற்கான அபாயம் உள்ளதால் பொதுமக்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் மாநில அரசுகள் தீவிரம் காட்டி வருகின்றன. இதன் விளையாக நாட்டில் இதுவரை 94.76 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.
நாட்டில் 18 வயதிற்கு மேல் உள்ளவர்களுக்கே கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகிறது. அதேபோல் ரஷ்யாவை சேர்ந்த ஸ்புட்னிக் வி என்ற தடுப்பூசியும் பயன்படுத்தப்படுகிறது.
கொரோனா மூன்றாவது அலை வந்தால் குழந்தைகளே அதிகம் பாதிக்கப்படுவார்கள் என்பதால் இவர்களுக்கான தடுப்பூசியைக் கண்டுபிடிப்பதில் பல நிறுவனங்களும் தீவிரமாக ஆராய்ச்சி மேற்கொண்டு வந்தனர்.
இந்நிலையில், குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்த ஹைதராபாத்தைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் பாரத் பயோடெக்கின் கோவாக்சின் தடுப்பூசிக்கு ஒன்றிய அரசு அனுமதி அளித்துள்ளது. கடந்த மூன்று மாதங்களாக எய்ம்ஸ் மருத்துவமனையில் 2 முதல் 17 வயது வரையிலான சிறுவர்களுக்கான கோவாக்சின் தடுப்பூசி சோதனை செய்யப்பட்டு வந்தது.
இந்த முடிவின் அடிப்படையில் 2 முதல் 17 வயது வரையிலான சிறுவர்களுக்கு கோவாக்சின் தடுப்பூசி செலுத்துவதற்கான அனுமதி வழங்கலாம் என ஒன்றிய அரசுக்கு மருத்துவக்குழு பரிந்துரை செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் இதை ஒன்றிய அரசு மறுத்துள்ளது.
இதுகுறித்து, குழந்தைகளுக்கான கோவாக்சின் தடுப்பூசிக்கு அவசரகால பயன்பாட்டிற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படி ஒரு ஒப்புதலை ஒன்றிய அரசு இன்னும் வழங்கவில்லை என சுகாதாரத்துறை இணை அமைச்சர் பாரதி ப்ரவீன் விளக்கம் கொடுத்துள்ளார்.