இந்தியா

“சேர் கூட இல்லை... தரையில் அமர்ந்து வாக்குப்பதிவு” : பீகாரில் பஞ்சாயத்துத் தேர்தலின்போது நடந்த அவலம்!

பீகார் மாநிலத்தில் நடைபெற்ற இரண்டாம் கட்ட பஞ்சாயத்து தேர்தலின்போது ஒரு வாக்குப்பதிவு மையத்தில் தரையில் அமர்ந்து வாக்குப்பதிவு நடந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

“சேர் கூட இல்லை... தரையில் அமர்ந்து வாக்குப்பதிவு” : பீகாரில் பஞ்சாயத்துத் தேர்தலின்போது நடந்த அவலம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

பீகார் மாநிலம், அராரியா மாவட்டத்திற்குட்பட்ட 20 பஞ்சாயத்துகளுக்கு நேற்று இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்நிலையில் ரகுநாத்பூர் தக்ஷின் பஞ்சாயத்தில் நடைபெற்ற ஒரு வாக்குச்சாவடி மையத்தில் மேஜை, நாற்காலிகள் எதுவும் அமைத்துக் கொடுக்காததால் தேர்தல் அதிகாரிகள் தரையில் அமர்ந்து வாக்குப்பதிவை நடத்தி முடித்துள்ளனர்.

இதேபோல், ரகுநாத்பூர் தெற்கு வார்டு எண் -1, எண் -87 ஆகிய வாக்குச்சாவடி மையங்களிலும் தேர்தல் அதிகாரிகளுக்கு மேஜை, நாற்காலிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்படவில்லை. இதனால் வாக்குப்பதிவு எந்திரங்களை தரையில் வைத்து அதிகாரிகள் வாக்குப்பதிவை நடத்தியுள்ளனர்.

இதனால், தரையில் அதிகாரிகள் பலமணிநேரம் அமர்ந்தவாறே தேர்தலை நடத்தியுள்ளனர். வாக்களிக்க வந்த பொதுமக்களும் தரையில் உட்கார்ந்து தங்களின் வாக்குகளைப் பதிவு செய்துள்ளனர்.

தற்போது இந்தப் புகைப்படங்கள் இணையத்தில் வெளியானதைத் தொடர்ந்து பீகார் தேர்தல் ஆணையத்திற்கும், ஆட்சி செய்துவரும் பா.ஜ.க அரசுக்கும் கடும் எதிர்ப்புகளைத் தெரிவித்து வருகின்றனர். அதேபோல் பல்வேறு வாக்குப்பதிவு மையங்களில் முறைகேடாக வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளதும் சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories