இந்தியா

UPSC தேர்வு குளறுபடி; வெட்டவெளிச்சமான மோடி அரசின் சமூகநீதி முகம் : அம்பலபடுத்திய இந்தியன் எக்ஸ்பிரஸ் !

உயர் பதவிகளிலும் ஒதுக்கீடு பெறும் சமூகங்களின் பங்கு வளர்ந்து வருவதைச் சீர்குலைப்பதற்காக செய்யப்பட்டுள்ள ஒரு முயற்சி எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

UPSC தேர்வு குளறுபடி; வெட்டவெளிச்சமான மோடி அரசின் சமூகநீதி முகம் : அம்பலபடுத்திய இந்தியன் எக்ஸ்பிரஸ் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

பொருளாதார ரீதியில் நலிந்த பிரிவினர் என்ற பெயரில் அதிக வருவாய் உள்ள உயர்சாதி வகுப்பினருக்கு இடஒதுக்கீடு அளித்து சமூக நீதியையே கேலிக் கூத்தாக்கியுள்ள நரேந்திர மோடி தலைமையிலான ஒன்றிய பாஜ.க. அரசின் சமூக நீதிக்கு எதிரான முகம் மீண்டும் வெளிச்சத்துக்கு வரும் வகையில் சிவில் சர்வீஸ் தேர்வுக்கான பொருளாதார ரீதியில் நலிந்த பிரிவினர் எனப்படும் அதிக வருவாயுள்ள உயர் சாதியினருக்கான கட்ஆஃப் எனப்படும் தகுதி மதிப்பெண்கள் பிற்படுத்தப் பட்டோருக்கான மதிப்பெண்களை விட குறைவாகக் கொடுக்கப்பட்டுள்ளது என்பதை பா.ஜ.க. ஆதரவு பத்திரிகையான "இந்தியன் எக்ஸ்பிரஸ்" ஆங்கில நாளேடே அம்பலப்படுத்தியுள்ளது.

இது குறித்து "தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்" ஆங்கில நாளேட்டின் நேற்றைய (29.9.2021) இதழில் பி.அன்புசெல்வன் சிறப்புச் செய்தி ஒன்றை எழுதியுள்ளார். அதிக அளவில் உயர் சாதியினரை உயர் பதவிகளில் அமர்த்த வேண்டும் என்ற தீய நோக்கத்துடனும், சமூக நீதியை சீர்குலைக்கும் திட்டத்துடனும் நடைபெற்றுள்ள இந்த நிகழ்வு குறித்து அந்தச் சிறப்புக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது:-

"தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக, ஒன்றிய தேர்வாணையத்தால் (யு.பி.எஸ்.சி.) நடத்தப்படும், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். போன்ற மக்கள் சேவைப்பணிகளுக்கான தேர்வில் கலந்து கொள்வதற்கான "கட்-ஆஃப்" எனப்படும் தகுதி மதிப்பெண்கள் "ஈ.டபிள்யு.எஸ்" எனப்படும் பொருளாதார ரீதியில் நலிந்த பிரிவினர் என்று குறிப்பிடப்பட்டாலும் அதிக வருவாய் பெறுவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ள முன்னேறிய வகுப்பினருக்கான ஒதுக்கீட்டுக்கு உரிய மதிப்பெண்கள் பிற்படுத்தப்பட்டோருக்கான தகுதி மதிப்பெண்களை விட குறைவாக உள்ளது.

முன்னேறிய வகுப்பினரின் ஒதுக்கீட்டுக்கான தகுதி மதிப்பெண் 894 தான். ஆனால் இதர பிற்படுத்தப்பட்டோருக்கான தகுதி மதிப்பெண் 907 ஆகும். இந்தத் தகவலை திங்களன்று ஒன்றிய அரசுப் பணிகளுக்கான தேர்வாணையமான யு.பி.எஸ்.சி. வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உயர் வகுப்பினருக்கான தகுதி மதிப்பெண்கள் தொடக்க நிலை, பிரதான மற்றும் இறுதி ஆகிய மூன்று நிலைகளிலுமே பிற்படுத்தப்பட்டோர்க்கான மதிப்பெண்களை விட குறைவாகவே உள்ளது. ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ், ஐ.எஃப்.எஸ். போன்ற உயர் பதவிகளில் உள்ள 836 காலியிடங்களை நிரப்புவதற்காக நடத்தப்படும் இந்த குரூப்-1 தேர்வுக்கான 761 போட்டியாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த ஆண்டு, இதர பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர் மற்றும் மலைவாழ் மக்கள் அல்லாதோரான சமுதாயங்களைச் சேர்ந்தவர்களில் இருந்து உயர் வகுப்பினருக்கான 10 சதவிகித ஒதுக்கீட்டின் மூலம் 78 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

UPSC தேர்வு குளறுபடி; வெட்டவெளிச்சமான மோடி அரசின் சமூகநீதி முகம் : அம்பலபடுத்திய இந்தியன் எக்ஸ்பிரஸ் !
DELL

உச்ச நீதிமன்றத்தில் தி.மு.க. வழக்கு!

பொருளாதார ரீதியில் நலிந்த பிரிவினர் (ஈ.டபிள்யு.எஸ்.) என்ற பெயரில் பொருளாதார ரீதியிலும் அதிக வருவாய் பெற அனுமதிக்கப்பட்டுள்ள முன்னேறிய வகுப்பினருக்கான இந்த ஒதுக்கீட்டை எதிர்த்து தி.மு.கழகம் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது. அதில் இந்த ஒதுக்கீடு சட்ட விரோதமானது என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அதை நியாயப்படுத்தி பா.ஜ.க. சார்பில் வாதிட்ட போது சில சமூகங்கள் நீண்ட காலத்திற்கு ஒதுக்கீடு வளாகத்திலிருந்து விலக்கப்பட்டு இருக்க முடியாது என்று கூறப்பட்டது.

மூத்த வழக்கறிஞர் பி.வில்சன் எம்.பி. வாதம்!

தி.மு.கழக எம்.பி.யும் மூத்த வழக்கறிஞருமான, பி.வில்சன் வாதிட்ட போது, பொருளாதார ரீதியில் பின்தங்கியோர் ஒதுக்கீட்டில் இடம் பெற்றுள்ள வகுப்பினர் தகுதி என்ற அடிப்படையில் ஒதுக்கீடு செய்யப்பட்ட சமூகங்களைச் (தாழ்த்தப்பட்டோர், மலைவாழ் மக்கள் மற்றும் இதர பிற்படுத்தப்பட்டோர்) சேர்ந்தவர்களுக்கான வேலைவாய்ப்புகளில் பெரும் பகுதியை எடுத்துச் சென்று விட்டனர். "1992ம் ஆண்டு இந்திரா சாஹானி வழக்கில் உச்ச நீதிமன்றம் இதர பிற்படுத்தப்பட்டோருக்கான ஒதுக்கீட்டை அங்கீகரித்தபோது, "ஒதுக்கீடு வகுப்புகளின் பின் தங்கிய நிலைக்கான ஆதாரபூர்வமான புள்ளி விபரங்கள் இல்லாமல் வழங்க முடியாது என்று கூறி அறிவியல் பூர்வமான புள்ளி விவரங்கள் இல்லாததால் மராத்தா ஒதுக்கீட்டை தள்ளுபடி செய்தது. பொருளாதார ரீதியில் நலிந்த பிரிவினர் (ஈடபிள்யுஎஸ்.) ஒதுக்கீட்டுக்கு எந்தவித நியாயமும் இல்லை என்பதால் நிலுவையில் உள்ள இந்த வழக்கை விரைவில் முடித்து வைக்கும்படி கேட்டுக் கொள்கிறோம்" என்றும் மூத்த வழக்கறிஞர் பி.வில்சன் குறிப்பிட்டார்.

ஒதுக்கீட்டுக்கு ஆதரவாகக் கருத்து கூறிய பா.ஜ.க. மாநில பொதுச் செயலாளரான கரு.நாகராஜன் ஈடபிள்யுஎஸ். ஒதுக்கீடு பொதுப்பிரிவில் வாய்ப்புகள் இல்லாமல் இருந்தவர்களில் பெரும்பாலோருக்கு புதிய வாய்ப்புகளை வழங்கியுள்ளது. பல தலைமுறையாக அரசுப் பணிகளை பெறாமல் இருந்த அவர்கள் பலனடைந்துள்ளனர் என்பதால் மற்ற ஒதுக்கீடுகளைப் போலவே இதுவும் ஓர் உள்ளடக்கிய முயற்சிதான்" என்ற தெரிவித்துள்ளார். ஆனால் அவர் தகுதி மதிப்பெண்கள் குறித்து கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டார்.

ஒதுக்கீட்டால் ஆத்திரமடைந்துள்ளனர்!

ஒன்றிய தேர்வணைக்குழு (யு.பி.எஸ்.சி.) தேர்வு எழுதக் காத்திருப்பவர்களில் ஒரு பிரிவினர் இந்த ஈடபிள்யுஎஸ். ஒதுக்கீட்டால் ஆத்திரமடைந்துள்ளனர். அவர்கள் இது குரூப்-1 தேர்வில் உயர் வகுப்பினர் பொறுப்புக்கு அதிக அளவில் வரவேண்டும் என்பதற்காகச் செய்யப்படும் தந்திரம் என்று கூறுகின்றனர். சேலத்திலிருந்து தேர்வு எழுத இருப்பவரும், தேர்வு பயிற்சியாளருமான எஸ்.சிவலிங்கம் என்பவர் "ஈடபிள்யுஎஸ். ஒதுக்கீடு என்பது இல்லாமல் இருந்திருந்தால் இந்த 86 வேலைவாய்ப்புகளும் இதர பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பொதுப் பிரிவினரிடையே பகிர்ந்து கொள்ளப்பட்டிருக்கும்" என்று கூறியுள்ளார். முன்னேறிய வகுப்பினரின் அளவு குரூப்-1 வேலை வாய்ப்புகளில் எவ்வளவு உள்ளது என்பதை ஆய்வு செய்யாமலே இந்த ஒதுக்கீடு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. உயர் பதவிகளிலும் ஒதுக்கீடு பெறும் சமூகங்களின் பங்கு வளர்ந்து வருவதைச் சீர்குலைப்பதற்காக செய்யப்பட்டுள்ள ஒரு முயற்சி என்றும் அவர் கூறியுள்ளார்.

இவ்வாறு "தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்" நாளேட்டின் சிறப்புச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories