இந்தியா

ரம்ஜான் ’அவர்களுடையது’ - 7 வயது குழந்தைகளிடத்தில் நஞ்சை விதைக்கும் NCERT : மதவெறியின் உச்சத்தில் BJP அரசு

இது இந்தியாவின் கருத்தாக்கத்தின் மீதான தாக்குதல் என்று மக்கள் கொதித்தெழுந்திருக்கிறார்கள்.

ரம்ஜான் ’அவர்களுடையது’ - 7 வயது குழந்தைகளிடத்தில் நஞ்சை விதைக்கும் NCERT : மதவெறியின் உச்சத்தில் BJP அரசு
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

‘வேற்றுமையில் ஒற்றுமை’ என்ற கோட்பாட்டின் கீழ் மதச்சார்பற்ற நாடாக விளங்கும் இந்தியாவை இந்து ராஷ்டிரமாக மாற்றுவதற்கான பல்வேறு சதித் திட்டங்களை தீட்டி வருகிறது ஆர்.எஸ்.எஸ்-ஆல் இயக்கப்பட்டு வரும் ஒன்றிய பாஜக அரசு.

அதற்காக அவர்கள் கையில் எடுத்திருக்கக் கூடிய கோளாக கல்வி இருக்கிறது. குறிப்பாக தொடக்கக் கல்வியில் இருந்தே இந்து மதம் சார்ந்த மதச்சாயங்களை குழந்தைகள் மீது திணிக்கும் வேளையில் ஈடுபட்டு வருகிறது.

அதன்படி சி.பி.எஸ்.இ பாடத்திட்டங்களில் திருவள்ளுவருக்கு காவி சாயம் பூசுவது, மதங்கள், சாதிகளை அடிப்படையாகக் கொண்டு பாகுபாட்டை ஏற்படுத்தும் வகையில் கேள்விகளை முன்வைப்பது போன்ற இழிவான செயல்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

அந்த வகையில் தற்போது இரண்டாம் வகுப்பு சி.பி.எஸ்.இ பாடத்தில் திருவிழாக்கள் தொடர்பான பகுதியில் ரமலான் மற்றும் விநாயகர் சதுர்த்தியை தொடர்புபடுத்தி அதன் மூலம் பிஞ்சுகளின் மனதில் நஞ்சை விதைக்கும் பணியில் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (National Council of Educational Research and Training- NCERT) ஈடுபட்டிருப்பது பட்டவர்த்தனமாகியுள்ளத

அந்த பாடத்தில், ரம்ஜான் பண்டிகையின் போது ‘அவர்கள்’ தொழுகை நடத்தி பின்னர் இனிப்புகளை உண்பார்கள் என்றும் விநாயகர் சதுர்த்தியை கடவுள் விநாயகரின் பிறந்தநாளை நாம் கொண்டாடுகிறோம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுபோன்று ‘அவர்கள்’ , ‘நாம்’ ஏழு வயதே கொண்ட குழந்தைகளின் மனதில் மத வேறுபாட்டை விதைத்திருக்கும் செயலுக்கு சமூக வலைதளங்களில் கடுமையான கண்டனங்களும் எதிர்ப்புகளும் எழுந்துள்ளன.

2ம் வகுப்பு படிக்கும் சிறார்களிடையே வகுப்புவாத உணர்வை திணிக்கிறார்கள் என்றும் இது இந்தியாவின் கருத்தாக்கத்தின் மீதான தாக்குதல் என்றும் குறிப்பிட்டு வருகிறார்கள். மேலும் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சிலின் எண்ணம்தான் என்ன என்றும் கேள்விகள் எழுப்பப்பட்டு வருகிறது.

banner

Related Stories

Related Stories