இந்தியா

“YouTube வீடியோ பார்த்து 7 மாத கருவைக் கலைத்த இளம் பெண்” : விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல் !

யூடியூப் வீடியோ பார்த்து கர்ப்பிணி ஒருவர் கருவைக் கலைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

“YouTube வீடியோ பார்த்து 7 மாத கருவைக் கலைத்த இளம் பெண்” : விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர் அதேப் பகுதியைச் சேர்ந்த சாஹில் வஹாப் கான் என்பவருடன் ஆறு வருடங்களாகப் பழகி வந்துள்ளார். இதனால் இந்தப் பெண் கர்ப்பமடைந்துள்ளார்.

இதையடுத்து அந்தப் பெண் தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி வஹாப் கானிடம் கூறியுள்ளார். தனக்கு ஏற்கனவே திருமணமாகி குழந்தை இருப்பதால் உன்னைத் திருமணம் செய்து கொள்ள முடியாது என தெரிவித்துள்ளார்.

பின்னர் இருவரும் சேர்ந்து கருவைக் கலைக்க முடிவு செய்து மருத்துவரிடம் சென்றுள்ளனர். அப்போது பரிசோதித்த மருத்துவர் கரு ஏழு மாதங்கள் வளர்ந்துவிட்டதால் கலைக்க முடியாது என கூறியுள்ளனர்.

இதனால் யூடியூப் வீடியோ பார்த்து கருவை கலைத்துக் கொள்ளலாம் என அந்த பெண்ணிடம் வஹாப் கான் தெரிவித்துள்ளார். இதையடுத்து அந்த பெண்ணின் உறவினர்கள் வெளியூருக்குச் சென்ற நேரம் பார்த்து அவர் யூடியூப் வீடியோ பார்த்து கருவை கலைத்துள்ளார்.

பிறகு வயிற்றிலிருந்து வெளிவந்த உயிரற்ற சிசுவை எடுத்து யாருக்கும் தெரியாமல் அந்தப் பெண் புதைத்துள்ளார். பின்னர் அந்த பெண்ணின் உடல் நிலை மோசமடைந்ததை அடுத்து நடந்தவற்றை உறவினர்களிடம் தெரிவித்துள்ளார்.

இதை கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் வஹாப் கான் மீது காவல்நிலையத்தில் புகார் கொடுத்தனர். இந்த புகாரை அடுத்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து வஹாப் கானை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories