இந்தியா

காங்கிரஸில் இணைந்த கன்னையா குமார்... அதிகாரப்பூர்வமாக சேராதது ஏன்? - ஜிக்னேஷ் மேவானி விளக்கம்!

கன்னையா குமார் இன்று காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். ஜிக்னேஷ் மேவானி காங்கிரஸுக்கு ஆதரவளிப்பதாகவும் அதிகாரப்பூர்வமாக பின்னர் இணைவதாகவும் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸில் இணைந்த கன்னையா குமார்... அதிகாரப்பூர்வமாக சேராதது ஏன்? - ஜிக்னேஷ் மேவானி விளக்கம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

கன்னையா குமார் இன்று ராகுல் காந்தி முன்னிலையில் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.

குஜராத்தை சேர்ந்த சுயேச்சை எம்.எல்.ஏ ஜிக்னேஷ் மேவானி சுயேட்சை எம்.எல்.ஏ-வாக இருப்பதால் அதிகாரப்பூர்வமாக கட்சியில் இணையவில்லை என்றாலும் காங்கிரஸுடன் இணைந்து பணியாற்றுவதாகவும் தெரிவித்தார்.

டெல்லி ஜே.என்.யு மாணவர் சங்க முன்னாள் தலைவரும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவருமான கன்னையா குமார், காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தியுடன் சமீபகாலமாக தொடர்பில் இருந்து வந்தார்.

இந்தநிலையில் கன்னையா குமார் இன்று காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமையகத்தில் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி முன்னிலையில் அவர் காங்கிரஸில் இணைந்தார்.

ஜிக்னேஷ் மேவானி, குஜராத் வட்கம் தொகுதி சுயேட்சே சட்டப்பேரவை உறுப்பினராக உள்ளார். அவர் வெற்றி பெறுவதற்காக காங்கிரஸ் சார்பில் வேட்பாளர் நிறுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஜிக்னேஷ் மேவானி இன்று அதிகாரப்பூர்வமாக காங்கிரஸில் இணையவில்லை. அவர் கொள்கைரீதியாக காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து செயல்படுவதாகத் தெரிவித்துள்ளார்.

ஜிக்னேஷ் மேவானி தற்போது எம்.எல்.ஏ என்பதால் கட்சி தாவல் தடைச் சட்டத்தால் இடையூறு வரலாம் என்பதால் அவர் அதிகாரபூர்வமாக காங்கிரஸில் இணையவில்லை எனத் தகவல் வெளியாகியுள்ளது.

banner

Related Stories

Related Stories