இந்தியா

இணையத்தை முடக்கியும் ப்ளூடுத் செருப்பு அணிந்து காப்பியடித்த கும்பல்: REET தேர்வில் நடந்தது என்ன?

ஆசிரியர் தகுதித் தேர்வில் செருப்பில் ப்ளூடுத் வைத்துக் காப்பியடிக்க முயன்ற ஐந்து பேரை போலிஸார் கைது செய்தனர்.

இணையத்தை முடக்கியும் ப்ளூடுத் செருப்பு அணிந்து காப்பியடித்த கும்பல்: REET தேர்வில் நடந்தது என்ன?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

ராஜஸ்தான் மாநிலத்தில், மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு நேற்று ஆசிரியர் பணியிடங்களுக்கான தகுதித் தேர்வு (REET) நடைபெற்றது. இந்தத் தேர்வுக்காக மாநிலம் முழுவதும் 4,153 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன.மேலும் தேர்வில் முறைகேடுகள் எதுவும் நடைபெறாமல் இருக்கும் விதமாக பல்வேறு இடங்களில் இணையச் சேவை முற்றிலுமாக முடக்கப்பட்டிருந்தது.

இருந்தபோதும் செருப்பில் ப்ளூடுத் பயன்படுத்திக் காப்பியடிக்க முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிகானர் மாவட்டத்தில் ஒரு தேர்வு மையத்தில் மோசடி நடைபெறுவதாக போலிஸாருக்கு தகவல் கிடைத்தது. பிறகு போலிஸார் அங்குச் சோதனை செய்தனர். அப்போது ஐந்து மாணவர்கள் செருப்பில் ப்ளூடுத் பயன்படுத்து காப்பியடித்துக் கொண்டிருந்தது தெரியவந்தது.

இதையடுத்து அவர்கள் தேர்வு அறையிலிருந்து வெளியேற்றப்பட்டனர். மேலும் செருப்பில் நவீன ப்ளூடுத் பொருத்துவதற்காக ரூ.6 லட்சம் வரை செலவு செய்ததும் தெரியவந்துள்ளது. இதேபோல் 25 பேருக்கு இந்த ப்ளூடுத் செருப்பு விற்பனை செய்யப்பட்டுள்ளதும் அம்பலமாகியுள்ளது.

இணையத்தை முடக்கியும் ப்ளூடுத் செருப்பு அணிந்து காப்பியடித்த கும்பல்: REET தேர்வில் நடந்தது என்ன?

இது குறித்து போலிஸார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் செருப்பை விற்பனை செய்த இரண்டு பேரைக் கைது செய்துள்ளனர். அதேபோல் தேர்வில் மோசடி செய்த ஐந்து பேரையும் கைது செய்து அவர்களிடம் போலிஸார் விசாரணை நடத்த வருகின்றனர்.

மேலும் ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்டதாக டவுஸா மற்றும் ஜெய்ப்பூர் பகுதிகளில் 12 பேரை போலிஸார் கைது செய்துள்ளனர். முறைகேடுகள் நடைபெறாமல் இருக்கு இணையச் சேவை முடக்கியபோதும் ப்ளூடுத் பயன்படுத்தி மோசடி செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories