இந்தியா

"நான்தான் புலி... நீதிமன்றத்தை பார்த்தெல்லாம் பயப்படாதீங்க" : திரிபுரா பா.ஜ.க முதல்வரின் சர்ச்சை பேச்சு!

நீதிமன்ற அவமதிப்பு பற்றி யாரும் அச்சப்படத் தேவையில்லை என திரிபுரா முதல்வர் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

"நான்தான் புலி... நீதிமன்றத்தை பார்த்தெல்லாம் பயப்படாதீங்க" : திரிபுரா பா.ஜ.க முதல்வரின் சர்ச்சை பேச்சு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

திரிபுரா மாநிலம் அகர்தலாவில் கடந்த சனிக்கிழமையன்று சிவில் சர்வீஸ் அதிகாரிகள் மாநாடு நடைபெற்றது. இதில் அம்மாநில முதல்வர் பிப்லப் குமார் தேப் கலந்துகொண்டார். அப்போது அவர் நீதிமன்ற அவமதிப்பு காரணமாக அதிகாரிகள் பணி செய்யத் தயங்குவதாகப் பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

முதல்வர் பிப்லப் குமார் தேப் பேசுகையில், "நீதிமன்ற அவமதிப்பு அச்சம் காரணமாக அதிகாரிகள் சில பணிகளைச் செய்யத் தயங்குகிறார்கள். நீதிமன்றத்தைக் கண்டு அச்சம் எதற்கு?

நீதிமன்றம் தீர்ப்பை மட்டுமே வழங்கும். நீதிமன்றத்தின் உத்தரவை எனது கட்டுப்பாட்டில் உள்ள காவல்துறை மூலம் நான்தான் செயல்படுத்துவேன். நீதிமன்றத்தைக் கண்டாலே அதிகாரிகள் புலியைப் போல் அஞ்சுகிறார்கள். ஆனால் நான்தான் புலி. எனவே அதிகாரிகள் நீதிமன்றத்தைக் கண்டு அஞ்சவேண்டாம்" எனத் தெரிவித்துள்ளார்.

திரிபுரா முதல்வர் பிப்லப் குமார் தேபின் இந்தப் பேச்சுக்கு வழக்கறிஞர்கள் பலரும் கண்டனங்களைத் தெரிவித்து வருகிறார்கள். மேலும் அரசியல் கட்சித் தலைவர்களும் இவரது பேச்சுக்கு எதிர்ப்பு குரல் எழுப்பியுள்ளனர்.

banner

Related Stories

Related Stories