இந்தியா

"தந்தையின் கொலைக்கு பிரதமரிடம் நீதி கேட்கும் சிறுவன்” : வைரலாகும் உருக்கமான பேச்சு - பின்னணி என்ன?

தனது தந்தையின் கொலைக்கு நீதி வேண்டும் என பிரதமர் மோடியிடம் அசாமைச் சேர்ந்த சிறுவன் வேண்டுகோள் வைத்துள்ளான்.

"தந்தையின் கொலைக்கு பிரதமரிடம் நீதி கேட்கும் சிறுவன்” : வைரலாகும் உருக்கமான பேச்சு - பின்னணி என்ன?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

அசாம் மாநிலம், கச்சார் மாவட்டத்தில் உள்ள சில்கார் நகரில் கடந்த 2016ஆம் ஆண்டு ஒப்பந்ததாரர் செய்துல் ஆலம் லஸ்கர் என்பரை மணல் கடத்தல் கும்பல் இரும்புக் கம்பியால் அடித்து கொடூரமாக கொலை செய்தது.

இந்தக் கொலை சம்பவம் அசாம் மாநிலத்தையே உலுக்கியது. இதையடுத்து போலிஸார் இதுதொடர்பாக மணல் கடத்தல் கும்பலைச் சேர்ந்த 11 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர். பின்னர் ஒன்பது குற்றவாளிகளை போலிஸார் கைது செய்தனர்.

ஆனால், 2 குற்றவாளிகளை போலிஸார் கைது செய்யவில்லை. மேலும் அவர்கள் வெளியில் சுதந்திரமாகச் சுற்றி வருகிறார்கள். அவர்களைக் கைது செய்வதில் போலிஸ் அலட்சியம் காட்டி வருவதாக செய்துல் ஆலம் லஸ்கரின் மனைவி குற்றம்சாட்டி வருகிறார்.

இந்நிலையில் செய்துல் ஆலம் லஸ்கரின் மகன், தந்தையின் கொலைக்கு நீதிவேண்டும் என பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, அசாம் முதலமைச்சருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து சிறுவன் வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளான்.

சிறுவனின் இந்த வீடியோவில், "பிரதமர், உள்துறை அமைச்சர் மற்றும் முதலமைச்சருக்கு வணக்கம். என் பெயர் ரிஸ்வான் சாஹித் லஸ்கர். நான் மூன்று மாத குழந்தையாக இருந்தபோது ​​டிசம்பர் 26, 2016 அன்று என் தந்தை 11 குற்றவாளிகளால் கொடூரமாகக் கொல்லப்பட்டார். இந்த விஷயத்தை கவனித்து எங்களுக்கு நீதி வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.

மேலும் சிறுவன் பேசும் வீடியோவை அவனது பெயரிலேயே ட்விட்டர் கணக்கைத் தொடங்கி அவரது உறவினர்கள் வெளியிட்டுள்ளனர். சிறுவனின் இந்த உருக்கமான பேச்சு தற்போது இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது.

banner

Related Stories

Related Stories