இந்தியா

’2வது அலையே இன்னும் முடியல; கவனமாக இருக்க வேண்டிய நேரம்’ - ஒன்றிய சுகாதாரத்துறை எச்சரிக்கை!

கொரோனா தடுப்பூசி நோய் மாறும் தன்மையை தடுப்பதற்கானது, நோயைத் தடுப்பதற்கானது அல்ல என ராஜேஷ் பூஷன் கூறியுள்ளார்.

’2வது அலையே இன்னும் முடியல; கவனமாக இருக்க வேண்டிய நேரம்’ - ஒன்றிய சுகாதாரத்துறை எச்சரிக்கை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

இரண்டாம் அலை இன்னும் முடிவுக்கு வரவில்லை. ஒவ்வோரு விழாக்காலம் முடிந்தவுடன் கொரோனா பாதிப்பு அதிகரிக்கிறது. அந்த வகையில் செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் அனைவரும் மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

பண்டிகைகளை மிகுந்த எச்சரிக்கையுடன், பாதுகாப்பு வழிமுறைகளுடன் கொண்டாட வேண்டும். கொரோனா கட்டுப்பாடுகளை அனைவரும் கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும் என ஒன்றிய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், எங்கெல்லாம் கொரோனா வழிமுறைகளைப் பின்பற்றவில்லையோ அங்கெல்லாம் பாதிப்பு அதிகரிப்பதைக் காண முடிகிறது. கொரோனா தடுப்பூசி நோய் மாறும் தன்மையை தடுப்பதற்கானது, நோயைத் தடுப்பதற்கானது அல்ல.

எனவே, இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களும் கண்டிப்பாக மாஸ்க் அணிய வேண்டும். சைடஸ் கேடிலாவின் ZyCoV-D தடுப்பூசி அக்டோபர் மாதம் பயன்பாட்டுக்கு வரும் என்ற அவர், கடந்த 24 மணிநேரத்தில் பதிவான 46,000 புதிய பாதிப்புகளில் கேரளாவில் மட்டுமே 58 சதவிகிதம் பதிவாகியுள்ளது. இதர மாநிலங்களில் கொரோனா பரவல் குறைந்தவண்ணமே உள்ளது எனக் கூறியுள்ளார்.

மேலும், கேரளாவில் மட்டும் 1 லட்சம் பேர் சிகிச்சையில் இருக்கிறார்கள். அதாவது மொத்த பாதிப்பில் 51% பேர். மகாராஷ்டிராவில் 16 சதவிகிதமும், மற்ற மாநிலங்களில் 4-5 சதவிகித பேர் சிகிச்சையில் இருக்கிறார்கள் என்றார்.

ராஜேஷ் பூஷனை தொடர்ந்து பேசிய ஐ.சி.எம்.ஆர். இயக்குநர் பல்ராம் பாத்கவா, தடுப்பூசி நோயின் வீரியத்தைக் குறைக்கிறது. மருத்துவமனையில் சேருவதையும், உயிரிழப்பையும் 98,99% குறைக்கிறது என்றார். மேலும், கொரோனா பரவல் இல்லை என நினைத்து முகக்கவசம் அணியாமல் இருந்திடக் கூடாது எனவும் அறிவுறுத்தியுள்ளார்.

banner

Related Stories

Related Stories