இந்தியா

“பணியிடத்தில் துன்புறுத்தல்.. உயரதிகாரி முகத்தில் மண்ணை வீசிய பெண் அதிகாரி” : ஆந்திராவில் பரபரப்பு!

ஆந்திர மாநிலத்தில், அறநிலையத்துறை அதிகாரி மீது பெண் ஊழியர் முகத்தில் மண்ணை வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

“பணியிடத்தில் துன்புறுத்தல்.. உயரதிகாரி முகத்தில் மண்ணை வீசிய பெண் அதிகாரி” : ஆந்திராவில் பரபரப்பு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

ஆந்திர மாநிலத்தில் அறநிலையத்துறை துணை ஆணையராக இருப்பவர் புஷ்பவர்தன். இவர் விசாகப்பட்டினத்தில் உள்ள அறநிலையத்துறை அலுவலகத்தில் தனது அறையில் மூன்று அதிகாரிகளுடன் பேசிக் கொண்டிருந்தார்.

அப்போது, அறைக்குள் நுழைந்த உதவி ஆணையர் கே.சாந்தி திடீரென, துணை ஆணையர் புஷ்பர்தன் மீது மண்ணை வீசினார். இதனைச் சற்றும் எதிர்பார்க்காத அவர் எந்த விதமான எதிர்ப்பையும் தெரிவிக்காமல் அப்படியே தன்னுடைய நாற்காலியில் அமர்ந்துள்ளார்.

அலுவலகத்திலிருந்த மற்ற அதிகாரிகள் உதவி ஆணையர் சாந்தியை வெளியே செல்லுமாறு கூறுகிறார்கள். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியோகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வேகமாகப் பரவி வருகிறது.

இந்த சம்பவம் குறித்து உதவி ஆணையர் சாந்தி பேசுகையில், கடந்த சில வாரங்களாகப் புஷ்பவர்தன் தன்னையும் மற்ற அதிகாரிகளையும் மனரீதியாகத் துன்புறுத்துவதாகவும், வேண்டும் என்றே பழிவாங்கும் நோக்கில் பணியிட மாற்றம் செய்வதாகவும், மிரட்டி வருவதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும், இவரின் இந்த குற்றச்சாட்டுக்கு புஷ்பவர்தன் மறுப்பு தெரிவித்துள்ளார். சாந்தி மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறநிலையத்துறை ஆணையரிடம் வலியுறுத்தியுள்ளதாகவும் புஷ்பவர்தன் தெரிவித்துள்ளார். அறநிலையத்துறையில் உயரதிகாரிகளுக்கிடையே ஏற்பட்டுள்ள இந்த மோதல் சம்பவம் ஆந்திர மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories