இந்தியா

“BJP ஆட்சியில் சீரழியும் உத்தர பிரதேசம்”.. ரூ.687 கோடி மதிப்பிலான போதை மருந்துகள் பறிமுதல் - ஒருவர் கைது!

உத்தர பிரதேசத்தில் ரூபாய் 687 கோடி மதிப்பிலான போதை மருந்துகளை போலிஸார் பறிமுதல் செய்துள்ளனர்.

“BJP ஆட்சியில் சீரழியும் உத்தர பிரதேசம்”.. ரூ.687 கோடி மதிப்பிலான போதை மருந்துகள் பறிமுதல் - ஒருவர் கைது!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

உத்தர பிரதேச மாநிலத்தில், அண்மையில் தனியார் மருத்துவமனை அறுவை சிகிச்சைப் பிரிவில் பீர் பாட்டில்கள் கண்டறியப்பட்டநிலையில், ரூபாய் 687 கோடிக்குப் போதை மருந்துகளை போலிஸார் பறிமுதல் செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தர பிரதேச மாநிலம், மகராஜ்கஞ்ச் மாவட்ட துடிபரி பகுதியில் போதை மருந்துகள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக போலிஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்துள்ளது.

இதையடுத்து சம்பந்தப்பட்ட இடத்தில் போலிஸார் சோதனை நடத்தினர். அப்போது ரமேஷ்குமார் குப்தா என்பவரின் வீடு மற்றும் குடோனில் இருந்து போதை ஊசிகள், சிரப்புகள், மருந்துகள் மற்றும் போலி லேபிள்கள் இருந்துள்ளன. இதன் மதிப்பு ரூபாய் 687 கோடி என தெரியவந்ததை அடுத்து போலிஸார் அதிர்ச்சியடைந்தனர்.

பின்னர், குடோனில் இருந்து போதை மருந்துகளை போலிஸார் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து, ரமேஷ்குமார் குப்தாவை போலிஸார் கைது செய்தனர்.

மேலும் போலிஸார் நடத்திய விசாரணையில், போதை மருந்துகள், மருந்துக் கடையில் விற்கப்பட்டதும், நேபாளத்துக்குக் கடத்தப்பட்டதும் தெரியவந்துள்ளது. இந்த போதை மருந்துகளுக்குப் பின்னால் எந்த கும்பலுக்குத் தொடர்பு உள்ளது என போலிஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆட்சியில், பாலியல் குற்றங்கள், பெண்கள் மீது தாக்குதல், மதவெறி தாக்குதல், போதைக்கு அடிமையாகும் இளைஞர்கள் என மாநிலமே சீரழிந்துவிட்டதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

banner

Related Stories

Related Stories